ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகை பூஜை பட் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார். 2001ம் ஆண்டு எவ்ரிபடி சேஸ் ஐ ஆம் ஃபைன் படத்தில் தான் இவர் கடைசியாக நடித்திருந்தார். அதன் பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்ட பூஜா பட், டைரக்ஷன் மற்றும் படங்கள் தயாரிப்பதில் மும்முரமாக இருந்து வந்தார்.
தற்போது ரித்தீஷ் சித்வானியும் ஃபர்கான் அக்தரும் இணைந்து தயாரிக்கும் மிஸ்டர் ஷாலு என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பூஜா பட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். இந்த கேரக்டரில் தபுவை நடிக்க வைக்க தான் முதலில் திட்டமிட்டிருந்தனராம். இருப்பினும் பூஜா பட் தான் அந்த கேரக்டருக்கு பொறுத்தமாக இருப்பார் என முடிவு செய்தனராம்.
பூஜாவை தொடர்பு கொண்ட ரித்தீஷ், நீங்கள் இப்போது நடிப்பீர்களா என கேட்டுள்ளார். நான் எப்போதுமே நடிகை தான் என பதிலளித்த பூஜாவிடம் படத்தின் கதை பற்றியும், அதில் அவரின் கேரக்டர் குறித்து விரிவாக கூறினாராம், ரித்தீஷ். இந்த படத்தில் கதைப்படி இடைவெளிக்கு முன்பு தான் பூஜா பட் வருகிறாராம். அதன் பின் கடைசி வரை அவரை மையப்படுத்தியே கதை செல்கிறதாம்.
மிஸ்டர் ஷாலு படத்தில் சைப் அலி கான் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கங்கனா ரனாவத்தும், ரிச்சா ஷதாவும் நடிக்கிறார்கள். இந்த படத்தை ரீமா கங்டி இயக்க உள்ளார்.