இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு உண்டு. இதற்கு முன் அவர் தமிழில் இயக்கிய 'ரமணா' படம் தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்க ரீமேக் செய்யப்பட்டதும், அவரே சிரஞ்சீவியை நாயகனாக வைத்து இயக்கிய 'ஸ்டாலின்' படம் மூலமும் அவர் அங்கு புகழ் பெற ஆரம்பித்தார். அதன் பின் சூர்யா நடித்த 'கஜினி' படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு அவருக்கும் மேலும் புகழைப் பெற்றுத் தந்தது.
சமீப காலமாக தமிழில் முன்னணி நாயகர்கள் நடிக்கும் படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்யப்படுவது ஒரு வழக்கமாகவே ஆகி விட்டது. அஜித், சூர்யா, விஷால், கார்த்தி ஆகியோர் நடிக்கும் ஒவ்வொரு படமும் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வருகிறது. இன்னும் விஜய்க்குத்தான் தெலுங்கில் மிகப் பெரிய வரவேற்பு கிடைக்காமலே இருக்கிறது. அது வெளிவரப் போகும் 'கத்தி' படம் மூலம் நிறைவேறிவிடும் என அவருடைய ரசிகர்களும் எதிர்பார்க்கிறார்கள்.
தமிழில் தீபாவளியன்று திரைக்கு வர உள்ள 'கத்தி' திரைப்படம் ஒரு வாரம் கழித்து 31ம் தேதிதான் தெலுங்கில் வெளியாக உள்ளது. அதற்கு முன்னதாக 23ம் தேதி 'கத்தி' படத்தின் தெலுங்கு இசை வெளியீட்டை நடத்த உள்ளார்களாம். சிரஞ்சீவியை அழைத்து விழாவை பிரம்மாண்டமாக நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.