Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விநாயக் இயக்கத்தில் அகில் நாயகனாக அறிமுகம்...

16 அக், 2014 - 11:34 IST
எழுத்தின் அளவு:

80களின் முன்னணி நடிகையான அமலா தெலுங்குப் படங்களில் நடிக்க ஆரம்பித்ததும் அங்கு முன்னணி நடிகராக இருந்த நாகார்ஜுனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அகில் என்ற ஒரு மகன் இருக்கிறார். குழந்தையாக இருந்த போதே 'சுட்டிக் குழந்தை' என்ற படத்தில் நடித்தவர்தான் அகில். இப்போது அவரை நாயகனாக அறிமுகப்படுத்த உள்ளார்கள். இதற்கு முன் ஏ.நாகேஸ்வரராவ், நாகார்ஜுனா, நாக சைதன்யா என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாத்தா, மகன், பேரன் நடித்த 'மனம்' படத்தில் அகிலும் ஒரு 'கேமியோ' தோற்றத்தில் நடித்ததற்கே மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.

பல முன்னணி இயக்குனர்களிடம் மகன் அகிலை நாயகனாக அறிமுகப்படுத்துவதற்காக கதை கேட்டு வந்தார் நாகார்ஜுனா. தற்போது பல வெற்றிப் படங்களைக் கொடுத்த கமர்ஷியல் இயக்குனரான வி.வி.விநாயக் மூலம் அகிலை அறிமுகப்படுத்த உள்ளார்கள். பல முன்னணி நடிகர்களை இயக்கிய விநாயக் சமீபத்தில் தயாரிப்பாளரான பெல்லம் கொண்டா ராஜுவின் மகன் சாய் சீனிவாசை 'அல்லுடு சீனு' என்ற படம் மூலமாக வெற்றிகரமான நாயகனாக அறிமுகம் செய்து வைத்தார்.


ஆனால், விநாயக் இதுவரை நாகார்ஜுனாவை இயக்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விநாயக் - அகில் இணையும் படத்தில் இரு ஹீரோயின்கள் நடிக்கும் வாய்ப்பு உள்ளதாம். இப்போது அகிலுக்கு ஜோடியாக நடிக்க பலர் முயன்று வருகிறார்கள் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in