Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சூசந்திற்கு செல்ல மிரட்டல் விட்ட அன்கிதா

15 அக், 2014 - 15:40 IST
எழுத்தின் அளவு:

கடந்த ஐந்தரை ஆண்டுகளுக்கும் மேலாக அன்கிதா லொகந்தி நடித்து வரும் பவித்ரா ரிஸ்தான் என்ற டிவி தொடர் முடிவடையும் நிலைக்கு வந்துள்ளது. இதில் தனக்கு ஜோடியாக நடித்து வரும், தனது காதலர் சூசன்த் சிங் ராஜ்புட்டை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளாராம் அன்கிதா. தொடர்ந்து சீரியல் எதிலும் நடிக்கும் எண்ணம் தனக்கு இல்லை என கூறும் அன்கிதா, தங்களின் அடுத்த தொடரில் நடிக்குமாறு பாலாஜி டெலிபிலிம்சின் ஏக்தா கபூர் தன்னிடம் கேட்டதாகவும், அதற்கு தான் மறுத்து விட்டதாகவும் கூறுகிறார்.

மேலும் சோப் விளம்பரங்கள் பலவற்றில் நடிப்பதற்கும் தனக்க வாய்ப்புக்கள் வந்து கொண்டிருப்பதாகவும், இருப்பினும் தனக்கு அதில் ஆர்மில்லை எனவும் அன்கிதா கூறி உள்ளார். தினசரி நடவடிக்கைகளில் என்ன செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள் என்று அன்கிதாவிடம் கேட்டதற்கு பதிலளித்த அவர், எனக்கு ஜிம்மிற்கு போக நேரமில்லை. அதனால் முடிந்த அளவு எனது ஆரோக்யத்தை கவனமாக பார்த்துக் கொண்டு வருகிறேன். எனக்கு நீச்சல் அடிப்பதற்கும் பாட்மிட்டன் விளையாடுவதற்கும் மிகவும் பிடிக்கும். முடிந்த போதெல்லாம் அவற்றை தவறாமல் செய்வேன் என்றார்.


திருமணம் பற்றி கேட்தற்கு, உடனடியாக திருமணம் செய்து கொள்ளும் ஐடியா எதுவும் கிடையாது. ஆனால் சூசந்திடம் நான் மிரட்டி வைத்துள்ளேன், அடுத்த ஓராண்டுக்குள் என்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் நான் உன்னை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று. ஆனால் உண்மையில் சூசந்த் மிகவும் இனிமையானவர். நிச்சயமாக அவர் என்னை சந்தோஷமாக பார்த்துக் கொள்வார். அந்த வகையில் அவரை என் வாழ்க்கையில் பெற்றது எனது அதிர்ஷ்டம். அவர் தற்போது ரொம்ப பிஸியாக இருப்பதால் எங்கள் திருமணம் பற்றி முடிவு செய்ய குறைந்தது எங்களுக்கு ஒரு மாதமாவது தேவை என்கிறார் அன்கிதா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in