பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
பாலிவுட்டு நடிகர்களில் முத்த நடிகர் என்று பெயர் எடுத்தவர் இம்ரான் ஹாஸ்மி. அதேப்போல் நடிகைகளில் முத்த நடிகை என்று பெயர் எடுத்திருப்பவர் ஆலியா பட். முதல் படமான, ''ஸ்டூடண்ட் ஆப் தி இயர்'' படத்திலேயே முத்தக்காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர். அதனைத்தொடர்ந்து அவர் நடித்த எல்லா படங்களிலும் முத்தக்காட்சி இடம்பெற்றது. ஆலியா பட் படம் என்றால் அதில் முத்தக்காட்சி இல்லாமல் இருக்காது என்ற நிலை உருவாகிவிட்டது. தற்போது அவர் சாந்தார் என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் ஆலியாவுடன் ஷாகித் கபூர் நடிக்கிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஹைடர் படம் வெற்றி பெற்று இருப்பதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் ஷாகித்.
இந்நிலையில் அந்த சந்தோஷத்துடனேயே தற்போது சாந்தார் படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார். ஹைடர் படத்தில் ஸ்ரத்தா கபூருடன் சில முத்தக்காட்சியில் நடித்தவர் இப்போது ஆலியா பட் உடனும் முத்தக்காட்சியில் நடிக்கிறாராம். விகாஷ் பகல் இயக்கும் சாந்தார் படத்தில் ஷாகித்துக்கும், ஆலியாவுக்கும் இடையே ரொமான்ஸ் காட்சியில், சில முத்தக்காட்சிகள் உள்ளதாம். ஆனால் இதை படத்தில் வைப்பதற்கு ஆரம்பத்தில் விகாஷ் தயங்கினாராம், காரணம் ஷாகித்-ஆலியாவுக்கு இடையேயான வயதை காரணம் காட்டி முத்தக்காட்சியை எடுக்க தயங்கினாராம். ஆனால் ஷாகித்-ஆலியா இருவரும் முத்தக்காட்சி தானே நடித்துவிடலாம் என்று கூலாக சொல்லிவிட்டார்களாம். இதனால் இயக்குநர் சந்தோஷத்தில் இருக்கிறார்.
இதனிடையே இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடக்கிறது. இதற்காக ஷாகித், ஆலியா மற்றும் ஷாகித்தின் சகோதரி சனா ஆகியோர் லண்டன் புறப்பட்டு சென்றுள்ளனர். சாந்தார் படத்தின் மூலம் ஷாகித் கபூரின் சகோதரி சனா, நடிகையாக சினிமாவில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.