ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கவுண்டமணியின் உதவியாளர் மதுரை செல்வம் தயாரிக்கும் படம் சீனி. இதில் கவுண்டமணியின் தீவிர ரசிகரான சஞ்சய் ஹீரோவாக நடிக்கிறார். இவர் பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்றவர். அவருக்கு ஜோடியாக ஓவியா நடிக்கிறார். லோக்கல் கேபிள் டி.வி ரிப்போர்ட்டர் மற்றும் செய்தி வாசிப்பாளராக நடிக்கிறார்.
வங்கியில் கடன் வாங்கி ஆஸ்திரேலியாவில் எம்.பி.ஏ படித்து விட்டு திரும்பும் இளைஞன் கடனை அடைக்க உள்ளூரில் ஒரு தொழில் தொடங்குகிறார். படித்த அவனை படிக்காத ஒருவன் ஏமாற்றுவது கதை. வாழ்க்கைக்கு தேவை படிப்பா? அறிவா? என்பதை சொல்லும் படம்.
சுராஜின் உதவியாளர் ராஜதுரை இயக்குகிறார். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார். "வைரமுத்து பாடல்களை எழுதி உள்ளார். டி.ராஜேந்தர் ஒரு பாடலை எழுதி பாடியுள்ளார். மதுரை சின்ன பொண்ணு கானா பாடல் பாடியுள்ளார். கலக்கலான காமெடி படமாக உருவாகி வருகிறது" என்கிறார் தயாரிப்பாளர் மதுரை செல்வம்.