பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் |
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாரூக்கான், வெடிகுண்டு துளைக்காத காரை வாங்கியுள்ளார். சமீபத்தில் நடிகர் ஷாரூக்கானின் வீட்டின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனையடுத்து அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு எல்லாம் போடப்பட்டது.
இந்நிலையில் தனக்கான பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக, இப்போது புதிதாக வெடிகுண்டு துளைக்காத காரை வாங்கியுள்ளார். அதிக பாதுகாப்புடன், நவீன வசதிகள் பொறுத்தப்பட்ட இந்த காரை மெர்சிடஸ் நிறுவனத்தில் இருந்து வாங்கியிருக்கிறார் ஷாரூக்கான். நாட்டில் பல பிரபலங்கள் குண்டுதுளைக்காத காரை பயன்படுத்தி வந்தாலும் மெர்சிடஸ் நிறுவனம் முக்கிய விவிஐபி.க்களுக்காக இதுபோன்ற கார்களை தயாரித்து வருகிறது. பாலிவுட் பிரபலங்களிலேயே ஷாரூக்கான் இதுபோன்ற உயர்ரக, காஸ்ட்லியான காரை பயன்படுத்தி வருகிறார்.
முன்னதாக, சத்தியமேவ ஜெயதே நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் அமீர்கானுக்கு நிறைய மிரட்டல்கள் வந்ததால் பாதுகாப்பு கருதி அவரும் குண்டு துளைக்காத காரை பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.