'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சுப்பிரமணியபுரம் ஸ்வாதி இப்போது பிசியான நடிகை இல்லைதான் ஆனாலும் மொழிக்கு ஒரு படத்தில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். அவர் நடித்துள்ள அமளி துமளி தமிழ் படம் விரைவில் வெளிவர இருக்கிறது. தற்போது யட்சன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தெலுங்கில் கார்த்திகேயாவில் நடிக்கிறார். டபுள் பரேல் என்ற மலையாளப்படத்தில் நடித்து வருகிறார்.
ஸ்வாதி இப்போது கவிதாயினி என்ற புது அவதாரத்தை எடுத்திருக்கிறார். படப்பிடிப்பு இடைவெளியில் நிறைய ஆங்கில கவிதைகள் எழுதுகிறார். அதனை பிற்காலத்தில் புத்தகமாக போடும் திட்டத்தில் இருக்கிறார். அவர் எழுதும் ஒரு சில கவிதைகளை தனது பேஸ்புக் டுவிட்டரில் போடுகிறார். சமீபத்தில் ரெஸ் அண்ட் சன் என்ற கவிதையை வெளியிட்டார். இது பரவலான பாராட்டை பெற்றதும். இப்போது முன்பைவிட அதிக தீவிரத்துடன் கவிதைகளை எழுதித் தள்ளிக்கொண்டிருக்கிறார்.