மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
மாதவன், கங்கனா ரணாவத் நடித்து 2011ம் ஆண்டு வெளிவந்த படம் தானு வெட்ஸ் மானு. ஆனந்த் எல்.ராய் இயக்கி இருந்தார். பெரிய வெற்றி பெற்ற இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இப்போது எடுக்கிறார்கள். அதிலும் மாதவன், கங்கனா ரணாவத்தே நடிக்கிறார்கள்.
லண்டன் டாக்டரான மாதவன் திருமணம் செய்து கொள்ள இந்தியா வருகிறார். கான்பூரில் கங்கனாவை பெண் பார்க்கிறார். ஆனால் வேறொருவரை காதலிக்கும் கங்கனா அதனை மாதவனிடம் சொல்கிறார். உடனே மாதவன் திருமணத்தை நிறுத்திவிட்டு லண்டன் சென்று விடுவார். ஆனாலும் அவரால் கங்கனாவை மறக்க முடியாது. நண்பன் கல்யாணத்துக்கு மீண்டும் இந்தியா வரும் மாதவன் அந்த திருமணத்தில் மீண்டும் கங்கனாவை சந்திக்கிறார். திருமணமாகும் நண்பன்தான் கங்கனாவின் காதலன் என்பது தெரிய வருகிறது. அவர்கள் காதல் முறிந்ததும் தெரிகிறது. இதனால் மாதவன், கங்கனாவை திருமணம் செய்து கொள்கிறார். இதனை காமெடியாக சொன்ன படம்.
இப்போது இரண்டாகம் பாத்தின் கதை முதல் பாகம் முடிந்த இடத்திலிருந்து தொடங்குகிறது. மாதவனும், கங்கனாவும் திருமணமாகி 4 ஆண்டுகளுக்கு பிறகு எப்படி இருக்கிறார்கள். அவர்களுக்குள் வரும் பிரச்சினைகள் என்ன? அதற்கான தீர்வு என்ன என்பதை காமெடியாக காட்டப்போகிறார்கள். முதல் பாகத்தை இயக்கிய ஆனந்த். எல்.ராயே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்.
அப்போது புதுமாப்பிள்ளையாக நடித்த மாதவன் இப்போது கொஞ்சம் மெச்சூர்டாக தாடிவைத்த குடும்பஸ்தனாக நடிக்கிறார். முதல் பாகத்தில் புதுப்பெண்ணாக நடித்த கங்கனா இதில் ஒரு குழந்தைக்கு தாயாக நடிக்கிறார்.