ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கில் இப்போது கவர்ச்சி கனவு கன்னியாக வளர்ந்து நிற்கிறவர் ரகுல் ப்ரீத்தி சிங். கவுதம் கார்த்திக் நடித்த என்னமோ ஏதோவில் நடித்திருந்தார். ஆனால் அது அவருக்கு முதல் படம் அல்ல. செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த 7ஜி ரெயின்போ காலனியில் சோனியா அகர்வாலின் தோழியாக நடித்திருக்கிறார். தடையறத் தாக்க படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்திருக்கிறார். இங்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காமல் தெலுங்கு பக்கம் சென்று சாதித்தார். அதன் பிறகே புத்தகம், என்னமோ ஏதோ மூலம் மீண்டும் வந்தார். அதன் பிறகும் இங்கு அவருக்கு வாய்ப்பில்லை.
ஆனால் தெலுங்கில் கவர்ச்சியில் கலக்கிக் கொண்டிருக்கிறார். முதன் முறையாக வெங்கடாத்ரி எக்ஸ்பிரஸ் படத்தில் கவர்ச்சியை களம் இறக்க அது ஒர்க்அவுட் ஆனது. தொடர்ந்து அதே பாணியை பின்பற்ற ஆரம்பித்தார். சமீபத்தில் வெளிவந்த லவுகியம் படத்தில் ப்ரீத்தியின் கிளாமர் ஆந்திர ரசிகர்களை உச்சுகொட்ட வைத்து விட்டது.
அடுத்து வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் கிளாமராக நடித்து வருகிறார். கிக் 2 வில் ரவிதேஜாவுடன் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ஏற்கெனவே யாரியான் இந்திப் படத்தின் மூலம் பாலிவுட்டுக்கும் அறிமுகமான ப்ரீத்தி சிங், இப்போது 37 வருடங்களுக்கு பிறகு ரமேஷ் சிப்பி இயக்கும் சிம்லா மிர்சி படத்திலும் நடிக்க இருக்கிறார்.