Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கமல், விக்ரம் வழியில்... கரு.பழனியப்பன்! கெட்டப் ரகசியம் காக்கிறாராம்!

13 அக், 2014 - 15:00 IST
எழுத்தின் அளவு:

பார்த்திபன் கனவு படத்தில் இயக்குநராக அறிமுகமான கருபழனியப்பன் விஷயமுள்ள இயக்குநர் என்று பெயர் எடுத்தாலும், வெற்றிப்பட இயக்குநர் என்ற பெயரை எடுக்கவில்லை. அவரரது முதல் படமான பார்த்திபன் கனவு வர்த்தக வெற்றியைப்பெற்றாலும், அடுத்தடுத்து இயக்கிய சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், மந்திரப்புன்னகை, சதுரங்கம், ஜன்னல் ஓரம் ஆகிய படங்கள் வெற்றிப்படங்கள் பட்டியலில் சேரவில்லை. இவற்றில் மந்திரப்புன்னகை படத்தில் அவரே கதாநாயகனாகவும் நடித்தார். இந்தப்படமும் தோல்விப்படமே. கரு பழனியப்பன் கடைசியாய் இயக்கியது ஜன்னல் ஓரம் படத்தை. மலையாளத்தில் வெற்றி பெற்ற ஆர்டினரி என்ற படத்தின் ரீமேக்தான் ஜன்னல் ஓரம். பார்த்திபன், விமல், விதார்த், பூர்ணா, மனிஷா யாதவ் என பெரும் நட்சத்திர கூட்டமே நடித்தும் ஜன்னல் ஓரம் படம் ஓடவில்லை.


கரு பழனியப்பன் இயக்கிய படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்தாலும், திரைப்பட விழாக்களில் தவறாமல் கலந்து கொண்டு தன் பாணியில் பொளந்து கட்டிக் கொண்டிருந்தார் கரு பழனியப்பன். சமீபகாலமாக திரைப்பட விழாக்களுக்கும் அவர் வருவதே இல்லை. ஏன்..என்னாச்சு? ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறாராம் கரு.பழனியப்பன். அந்தப்படத்துக்காக நீண்ட தலைமுடி முரட்டு மீசை தலைமுடி வளர்த்து வருகிறாராம். தன் கெட்டப் வெளியே தெரியக்கூடாது என்பதற்காகத்தான் திரைப்பட விழாக்களுக்கு வருவதை தவிர்க்கிறாராம்.


கமல், விக்ரம் வழியில் கரு.பழனியப்பன்னு ரசிகர்கள் சொல்வார்களா?


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in