Advertisement

சிறப்புச்செய்திகள்

ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சூர்யா ஜோடியாக கேத்தரின் தெரேசா...

13 அக், 2014 - 11:56 IST
எழுத்தின் அளவு:

கார்த்தி நடித்து சமீபத்தில் வெளியான 'மெட்ராஸ்' படத்தில் நாயகியாக அறிமுகமானவர் கேத்தரின் தெரேசா. கன்னடப் படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் குறுகிய காலத்திற்குள்ளேயே நடித்திருக்கிறார். தற்போது அதர்வா ஜோடியாக 'கணிதன்' படத்திலும், தெலுங்கில் 'ருத்ரமாதேவி, எர்ராபஸ்' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். 'மெட்ராஸ்' படத்தில் அவருடைய நடிப்பை பலரும் பாராட்டி வருகிறார்கள். இதனால், தொடர்ந்து தமிழில் தொடர்ந்து நடித்து முன்னணி இடத்தைப் பிடிக்க கேத்தரின் முடிவு செய்திருக்கிறாராம்.

அடுத்து சூர்யாவுக்கு ஜோடியாக கேத்தரின் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தமிழில் சிம்பு, த்ரிஷா நடித்த 'அலை', மாதவன், நீது சந்திரா நடித்த 'யாவரும் நலம்', தெலுங்கில் ஏ.நாகேஸ்வரராவ், நாகார்ஜுனா, நாக சைதன்யா, சமந்தா, ஸ்ரேயா நடித்து வெளிவந்து மாபெரும் வெற்றிப் படமாக அமைந்த 'மனம்' ஆகிய படங்களை இயக்கிய விக்ரம் குமார், சூர்யா நடிக்கும் படம் ஒன்றை இயக்கப் போகிறார். அதற்கான கதை விவாதமும் நடந்து முடிந்துவிட்டதாம். இந்தப் புதிய படத்தில்தான் கேத்தரின், சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.


தமிழில் தற்போது யார் நம்பர் 1 நடிகை என்றே சொல்ல முடியாத அளவிற்குத்தான் உள்ளது. சமந்தா, லட்சுமி மேனன், ஹன்சிகா, அனுஷ்கா, நயன்தாரா உள்ளிட்ட சில நடிகைகளுக்குள்தான் போட்டி உள்ளது. ஆனாலும், கடந்த சில வருடங்களாகவே தமிழ்த் திரையுலகின் 'கனவுக் கன்னி' யார் என்பது வெற்றிடமாகவே உள்ளது. ரசிகர்கள் அனைவரின் ஒட்டு மொத்த வரவேற்பைப் பெற்றவர் இவர் என யாரையும் குறிப்பிட முடியாமல் உள்ளது. இனியாவது, அந்த வெற்றிடம் நிரம்பும் என எதிர்பார்க்கலாம்...


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in