'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல்-கெளதமி மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள படம் பாபநாசம். மலையாள த்ரிஷ்யம் ரீமேக்கான இப்படம் அதையடுத்து தெலுங்கு, கன்னடத்தில் அப்படியே படமாக்கப்பட்டபோதும், தமிழில் கமல் நடிக்கிற படம் என்பதால் அவருக்கேற்ப சில திருத்தங்களையும் செய்திருக்கிறார்களாம். அதோடு, கமல் திருநெல்வேலி அண்ணாச்சியாக நடிக்கிறார்.
அதனால் அந்த ஊர்க்காரர்களைப்போன்று நெல்லை தமிழ் பேசி வருபவர், படம் முழுக்க வேஷ்டி சட்டை அணிந்து நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் கமலுக்கு மகள்களாக நிவேதா தாமஸ், எஸ்தர் அனில் ஆகியோர் நடிக்கிறார்கள். இதில் நிவேதா தாமஸ், ஜெய் நடித்த நவீன சரஸ்வதி சபதம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். எஸ்தர் அனில் தெலுங்கில் வெளியான த்ருஷ்யம் ரீமேக் படத்தில் வெங்கடேசுக்கு மகளாக நடித்தார்.
தெலுங்கு ரீமேக்கில் அவரது நடிப்பு சிறப்பாக இருந்ததால் தான், இப்போது தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்திலும் கமலின் இளைய மகளாக அவரையே நடிக்க வைத்திருக்கிறார்களாம். மேலும், பாபநாசம் ஸ்பாட்டுக்கு வந்ததில் இருந்தே கமலின் நிஜமகளைப் போலவே தன்னை மாற்றிக்கொண்டு தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறாராம் எஸ்தர் அனில்.
அதோடு, பாபநாசம் கதையில் மகள் கேரக்டர் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், எஸ்தருக்கு நடிப்பு குறித்து அவ்வப்போது அட்வைஸ் கொடுத்து வருகிறாராம் கமல். அதனால் தெலுங்கு பதிப்பில் நடித்ததை விடவும் தமிழில் எனது நடிப்பு இன்னும் பெரிய அளவில் பேசப்படும் என்று தெரிவித்துள்ளார் எஸ்தர் அனில்.