Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தனுஷ் படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கும் காஜல்அகர்வால்!

13 அக், 2014 - 08:46 IST
எழுத்தின் அளவு:

பொல்லாதவன், ஆடுகளம் என வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த இரண்டு படங்களுமே மெகா ஹிட். அதிலும் ஆடுகளம் தனுசுக்கு தேசிய விருது பெற்றுக்கொடுத்தது. அதனால் அவர்களது கூட்டணி ராசியானதாகி விட்டது. அதையடுத்து சிம்புவைக்கொண்டு வடசென்னை என்றொரு படத்தை தொடங்கினார் வெற்றிமாறன். ஆனால் அவர்களுக்கிடையே என்ன மோதல் நடந்ததோ, அந்த படம் ஆரம்பத்திலேயே கிடப்பில் போடப்பட்டது.

அதனால், மூன்று வருடங்களுக்கு பிறகு படம் இயக்க மீண்டும் களமிறங்கிய வெற்றிமாறன், மீண்டும் தனுஷையே அழைத்தார். அதையடுத்து சூதாடி என்ற படத்தை தான் இயக்கிக்கொண்டிருப்பதாக ஒரு பட விழாவில் வெற்றிமாறனே சொன்னார். ஆனால், அப்போது அனேகன், வேலையில்லா பட்டதாரி, ஷமிதாப் என பல படங்களில் தனுஷ் நடித்துக்கொண்டிருந்ததால். இவர் கேட்ட நேரத்திற்கு அவரால் கால்சீட் கொடுக்க முடியவில்லையாம்.


அதனால் தனுசுக்காக காத்திருக்க முடியாமல் அட்டகத்தி தினேஷை வைத்து குற்ற விசாரணை என்ற படத்தை தொடங்கினார் வெற்றிமாறன். தற்போது அப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், தான் நடித்து வந்த படங்களை முடித்து விட்டு ப்ரீயாகி விட்டார் தனுஷ். ஆனால் இந்த நேரத்தில் வெற்றிமாறன் ப்ரீயாக இல்லை குற்ற விசாரணையில் பிசியாக இருக்கிறார்.


அதனால், அடுத்து தனுஷ், சூதாடியில் நடிப்பதற்கு முன்பே ஏற்கனவே கமிட்டாகியிருக்கும் பாலாஜி சக்திவேல் இயக்கும் படத்திற்கு கால்சீட் கொடுப்பார் என்று தெரிகிறது. இந்த படத்தில் நடிக்க தனுஷ் எப்போது கால்சீட் கொடுப்பார் என்று சில மாதங்களாகவே காத்துக்கொண்டிருக்கிறார் காஜல்அகர்வால். காரணம், ஜில்லா, ஆல் இன் ஆல் அழகுராஜா படங்களுக்குப்பிறகு தமிழில் தனக்கு விழுந்த இடைவெளியை இந்த படம் மூலம் குறைத்து விட வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறார் காஜல்அகர்வால்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in