Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சுஹாசினி புகாரும்! போலீஸ் அதிரடி நடவடிக்கையும்!!

28 ஜூன், 2010 - 00:00 IST
எழுத்தின் அளவு:

ராவணன் படத்தின் திருட்டு வி.சி.டி.களை ஒழிக்கும்படி, சென்னை போலீஸ் கமிஷனரிடம் நடிகை சுஹாசினி நேரில் சென்று புகார் கொடுத்தார். டைரக்டர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் ரிலையன்ஸ் பிக் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தமிழ், தெலுங்கு, இந்தியில் ராவணன் படம் எடுக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கிய இப்படத்தின் திருட்டு விசிடி சரளமாக உலா வந்து கொண்டிருக்கின்றன. இதனால் திருட்டு விசிடியை ஒழிக்கக்கோரி நடிகை சுஹாசினி மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் சென்னை ‌‌போலீஸ் கமிஷனரை சந்தித்து ஒரு மனு ‌கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட கமிஷனர் ராஜேந்திரன், உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இதுபற்றி சுஹாசினி அளித்துள்ள பேட்டியில், ராவணன் மிகப்பெரிய படம். இந்த படத்துக்காக 3 ஆயிரத்து 200 பிரிண்டுகள் போடப்பட்டு உள்ளன. சினிமா படங்களின் திருட்டு வி.சி.டி.கள் உடனே வெளியாகிவிட்டால் அது ஒவ்வொருவருக்கும் எவ்வளவோ பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகிறது. மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் திருட்டு வி.சி.டி.களை ஒழிப்பதற்கு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. திருட்டு விசிடி ‌விற்கப்படுவது பற்றி கமிஷனரிடம் தெரிவித்தோம். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு இந்த படங்களின் திருட்டு வி.சி.டி.களை வைத்திருப்போர் ஒவ்வொருவரையும் கைது செய்வதற்கு உத்தரவிட்டார். இந்த படங்களின் திருட்டு வி.சி.டி. எங்குமே நடமாடாதபடி பார்த்து கொள்வதாகவும் அவர் உறுதி அளித்தார். திருட்டு வி.சி.டி.யை ஒழிப்பதற்கு தமிழ், தெலுங்கு உட்பட பல மாநிலத்தை சேர்ந்த சினிமா தொடர்புடைய அனைவரும் ஒன்று சேர்ந்து இயக்கமாக உருவாக்கினால்தான் வெற்றி பெற முடியும் என்று கமிஷனர் அறிவுறுத்தினார்.

புதுச்சேரியில்தான் இந்த படங்களை பிரிண்ட் போடுவதாக கேள்விப்பட்டோம். புதுச்சேரி முதல்-மந்திரி வைத்தியலிங்கம் எங்களுடன் பேசி, அவற்றை தடுப்பதாக கூறினார். அடுத்ததாக புதுச்சேரி செல்ல திட்டமிட்டுள்ளோம். பீகார், ஒரிசா, சண்டிகர் மாநிலங்களில் திருட்டு வி.சி.டி.களை ஒழித்துவிட்டனர். இணையதளத்தில் வெளியான ராவணன் படத்தை நவீன தொழில்நுட்பம் மூலம் தடுத்தோம். ஆனால் அவர்கள் வேறு இணைய தளத்தில் அவற்றை வெளியிடுகின்றனர். படம் எடுத்துவிட்டு, திருடர்கள் பின்னால் ஓட வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
தியேட்டர்களில் டிக்கெட் விலை உயர்வு காரணமாகவும் திருட்டு வி.சி.டி. தொழில் வளர்ச்சி அடைவதாக கூறினால், அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. படம் எடுக்கத்தான் எங்களுக்கு தெரியும். சினிமாத்துறை வாழ வேண்டுமென்றால் மக்கள் அனைவருமே எல்லா படங்களையும் தியேட்டருக்கு சென்று பார்க்க வேண்டும், என்று கூறினார்.

சுஹாசினியின் புகாரைத் தொடர்ந்து, இந்தப் படங்களின் திருட்டு டி.வி.டி.களை விற்பனை செய்கிறவர்களை கைது செய்யும்படி கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார். இணை கமிஷனர்கள் சக்திவேல், சேஷசாயி ஆகியோர் நேரடி மேற்பார்வையில், அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்ய பல தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்தத் தனிப்படைகள் சென்னையின் பல பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில், ராவணன், சிங்கம் போன்ற சில புதிய சினிமா படங்களின் உரிமம் பெறாமல் டி.வி.டி.களில் திருட்டுத் தனமாக பதிவு செய்து விற்பனை செய்த 15 பேர் பிடிபட்டனர். புதிய சினிமா மற்றும் பல ஆபாசப் படங்களுக்கான 600 டி.வி.டி.கள் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டன.

Advertisement
கருத்துகள் (38) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (38)

hari - chennai,இந்தியா
29 நவ, 2010 - 09:20 Report Abuse
 hari nallla padam edunga apuram compliant kodunga.
Rate this:
pg - Jacksonville,யூ.எஸ்.ஏ
04 ஜூலை, 2010 - 07:04 Report Abuse
 pg இந்த படத்தை தியேட்டரில் பார்ப்பதே அதிகம், இதுல திருட்டு விசிடி வேறு...படத்துக்கு இப்படி கூட பப்ளிசிட்டியா
Rate this:
prakash - thanjavur,இந்தியா
02 ஜூலை, 2010 - 20:00 Report Abuse
 prakash mani sir உங்க படம் எப்போதுமே ஒரு நல்ல திரைகதை இருக்கும் இதுவரை வந்த எல்லா படங்களும் அதற்கு சாட்சி அனால் ராவனனில் அந்த டச் மிஸ்ஸிங்
Rate this:
மணி - chennai,இந்தியா
02 ஜூலை, 2010 - 12:06 Report Abuse
 மணி மணி சார், நீங்க நல்லா இருக்கணும்னா சுகாசினிய இமைய மலைக்கு டூர் ன்னு கூட்டிட்டு பொய் மேல இருந்து தள்ளி விட்டுடுங்க. அப்போ தான் உங்கள பிடிச்ச சனியன் ஒழியும். உங்க படம்லாம் சூப்பர் ஹிட் ஆகும்.
Rate this:
sriram - chennai,இந்தியா
01 ஜூலை, 2010 - 09:10 Report Abuse
 sriram technically film superb,,,
Rate this:
மேலும் 33 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in