டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகர் சல்மான் கானின் படத்தை வேண்டாம் என்று தவிர்த்துவிட்டார் நடிகை தீபிகா படுகோனே. பாலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகையராக இருப்பவர்கள் சல்மானும், தீபிகா படுகோனேவும். கடந்தாண்டு, சல்மான் கான், தனது பேட்டியின் போது, தீபிகா படுகோனேயை தனது படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததாகவும், ஆனால் அதை அவர் மறுத்துவிட்டதாகவும் கூறினார். இதை தீபிகாவும் ஒப்புக்கொண்டார். அதேசமயம் ஷாரூக்கானின் ஓம் சாந்தி ஓம், சென்னை எக்ஸ்பிரஸ், ஹேப்பி நியூ இயர் என தொடர்ந்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் மீண்டும் சல்மான் கான் உடன் நடிக்கும் வாய்ப்பு தீபிகாவுக்கு தேடி வந்துள்ளது, ஆனால் இப்போதும் அவருடன் நடிக்க மறுத்துவிட்டார். தற்போது ஹேப்பி நியூ இயர் படத்தின் புரொமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கும் தீபிகா, அதை முடித்த கையோடு, அடுத்தப்படியாக சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் படத்தில் ரன்வீர் சிங் ஜோடியாகவும், அதற்கு அடுத்து, ரன்பீர் கபூருடன் ஒருபடத்திலும் நடிக்க கமிட்டாகி உள்ளார். இப்படி அடுத்தடுத்த படங்களாலும், கால்ஷீட் பிரச்னையாலும், சல்மான் கான் படத்தை வேண்டாம் என்று தவிர்ததுவிட்டாராம் தீபிகா படுகோனே.