ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி |
பாலிவுட்டின் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் இன்று(அக்., 11ம் தேதி) தனது 72வது பிறந்தநாளை குடும்பத்தாருடன் கொண்டாடினார். பாலிவுட்டின் ஆல்-டைம் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் அமிதாப் பச்சன். 1969-ம் ஆண்டு தனது சினிமா கேரியரை துவக்கிய அமிதாப், இப்போதும் தனது வயதுக்கேற்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இதுவரை சுமார் 180 படங்களுக்கு மேல் நடித்துள்ளவர், தேசிய விருது, பிலிம்பேர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை குவித்துள்ளார். இன்று அவருக்கு 72வது பிறந்தநாள். இந்த பிறந்தநாளை தனது மனைவி ஜெயா பச்சன், மகன் அபிஷேக், மருமகள் ஐஸ்வர்யாராய் மற்றும் மகள் ஸ்வேதா நந்தா ஆகியோருடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமிதாப், என்னுடைய பிறந்தநாளுக்காக வாழ்த்திய அனைத்து ரசிகர்களுக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த பிறந்தநாளுக்கு எனது பேத்தியை வாழ்த்தை எண்ணி ஆவலாய் காத்திருந்தேன் என்று கூறியுள்ளார்.
அமிதாப்பின் பிறந்தநாளையொட்டி ஏராளமான பாலிவுட் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.