ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தீபாவளி வெளியீட்டில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படமாக 'கத்தி' படம் இருக்கிறது. ஏ.ஆர். முருகதாஸ் - விஜய் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதும், இந்த கூட்டணியில் முதன் முறையாக அனிருத் இணைந்திருப்பதும், விஜய் படத்தில் இரண்டு வேடங்களில் நடித்திருப்பதும், விஜய்யுடன் சமந்தா முதன் முறையாக ஜோடி சேர்ந்திருப்பதும் என ஒரு சில விஷயங்கள் புத்தம் புதிதாக அமைந்துள்ளன. தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்களில் விஜய்க்கு கிடைக்கும் வரவேற்பை எடுத்துக் கொண்டால், மற்ற தமிழ் நடிகர்களை விட அவருக்கு கேரளாவில்தான் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. 'கத்தி' படமும் அங்கு 200 தியேட்டர்களுக்கு மேல் வெளியாக இருக்கிறது.
ஆனால், தென்னிந்தியத் திரையுலகிலேயே பெரிய திரையுலகமான தெலுங்குத் திரையுலகில் விஜய், இன்னும் ஒரு முன்னணி இடத்தைப் பிடிக்காமலே இருக்கிறார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், சூர்யா, விஷால், கார்த்தி ஆகியோரின் படங்கள் 'டப்' செய்யப்பட்டு அங்கு நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. ஆனால், விஜய் படங்களுக்கு மட்டும் அங்கு இன்னும் நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை. அதை 'கத்தி' படம் மாற்றியமைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
'கத்தி' படம் தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. அதற்கு முன்னதாக படத்தின் இசை வெளியீட்டை விரைவில் நடத்த உள்ளார்களாம். அதில், நடிகர் சிரஞ்சீவி கலந்து கொள்ள உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் மூலம் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கலாம் எனப் படக்குழுவினர் எதிர்பார்க்கிறார்களாம். ஏ.ஆர்.முருகதாஸ் தெலுங்கில் இயக்கிய 'ஸ்டாலின்' படத்தில் சிரஞ்சீவி நடித்துள்ளார். அதோடு முருகதாஸ் இயக்கத்தில் தமிழில் வெளிவந்த 'ரமணா' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'தாகூர்' படத்திலும் சிரஞ்சீவி தான் நாயகனாக நடித்தார். இந்தப் படம் சிரஞ்சீவியின் மாபெரும் வெற்றிப் படங்களில் முக்கியப் படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
சிரஞ்சீவி வந்து 'கத்தி' தெலுங்கு இசை வெளியீட்டில் கலந்து கொண்டால் அங்கும் படத்திற்கு நல்ல அறிமுகம் கிடைக்க வாய்ப்புள்ளது.