தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
என்னதான் நம்பர் ஒன் காமெடி நடிகராக இருந்தாலும், அவர்கள் ஹீரோவாக புரமோஷன் அடைய நினைக்கும்போது, அவர்களுக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகைகள் யாருமே முன் வருவதில்லை.
இந்த சிக்கலை கடந்த காலங்களில் அனைத்து காமெடி நடிகர்களுமே சந்தித்துள்ளனர்.
சமீப வருடங்களில் வடிவேலுவுக்கும் இப்படியொரு அனுபவம் ஏற்பட்டது.
அவர் ஹீரோவாக நடிக்க எண்ணியபோது அவருக்கு ஜோடியாக யாரும் நடிக்க முன் வரவில்லை.
கடைசியில் வேறு வழியில்லாமல், இம்சைஅரசன் 23 ஆம் புலிகேசி படத்தில் தேஜாஸ்ரீ, மோனிகாவை கதாநாயகியாக்கினார்கள்.
இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தில் நடித்தபோதும் வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகைகள் முன்வரவில்லை.
பின்னர் கருணாஸ் ஹீரோவாக நடித்தபோதும் கதாநாயகி நடிகைகள் தலைதெறிக்க ஓடினார்கள்.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படம் மூலம் சந்தானம் ஹீரோவான போதும் இதுவேதான் நடந்தது.
அப்போது, அனுஷ்கா உட்பட பல கதாநாயகிகளை சந்தானம் அணுகியபோது கால்ஷீட் இல்லை என்று கையை விரித்தனர்.
அதே அனுஷ்கா, காமெடியன் சந்தானம் ஹீரோ புரமோஷன் ஆனதைப் பற்றி பாராட்டிப் பேசும்போது, அடுத்த படம் நாம சேர்ந்து பண்ணாலாமா? நல்ல கதை இருந்தா சொல்லுங்க என விளையாட்டாக சொன்னாராம் நடிகை அனுஷ்கா.
ராஜேஷ் டைரக்ஷன்ல ஆர்யா கூட ஒரு படம் நடிக்கப் போகிறேன். அதுல எனக்கு ஜோடியாக நடிக்க ஆர்ட்டிஸ்ட் தேடுறாங்க. நீங்க பண்றீங்களா? என ஒரு பிட்டைப் போட்டிருக்கிறார் சந்தானம்.
அனுஷ்காவை ஜோடியா கமிட் பண்ணாத்தான் நான் படத்துல நடிப்பேன்னு சொல்லிடுங்க. சேர்ந்து நடிச்சிடுவோம் என்று அனுஷ்காவும் விளையாட்டாக பதில் சொல்லி இருக்கிறார்.
இது நடந்து கொஞ்ச நாட்கள் கழித்து, ஒரு முறை லிங்கா ஷூட்டிங்கில் ரஜினியைப் பார்க்க இயக்குநர் ராஜேஷ் வந்தபோது, எனக்கு ஜோடி இவங்கதான் என பக்கத்தில் இருந்த அனுஷ்காவை கையைக் காட்டினாராம் சந்தானம்.
ராஜேஷ் ஜெர்க் ஆக, அனுஷ்காவும் ஷாக்காகிவிட்டாராம்.