பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
தமிழ் நாட்டு பெண்ணாக இருந்தாலும் கன்னடத்தில் பிசியான நடிகையாக இருந்தவர் விஜயலட்சுமி. தமிழில் பிரண்ட்ஸ், யெஸ் மேடம், ராமச்சந்திரா உள்பட பல படங்களில் நடித்தார்.
பரபரப்பு நடிகை
குறைந்த படங்களிலேயே நடித்திருந்தாலும் விஜயலட்சுமி பரபரப்பான நடிகை. அடிக்கடி செய்திகளில் அடிபடுகிறவர். சமீபத்தில் ஒரு அரசியல் கட்சி தலைவரை திருமணம் செய்து கொண்டேன் என்று அவர் சொன்னதுதான் கடைசி பரபரப்பு. அதன் பிறகு சமீபகாலமாக மிகவும் அமைதியாகிவிட்டார். பாஸ் என்கிற பாஸ்கரன், தில்லாலங்கடி, தம்பிக்கோட்டை படங்களில் அக்கா, அண்ணி கேரக்டர்களில் நடித்தார்.
நரேன் ஜோடி
தற்போது கத சொல்லப்போறோம் என்ற படத்தில் ஆடுகளம் நரேன் ஜோடியாக நடித்துள்ளார். இது குழந்தைகள் பற்றிய படம். கதையின் நாயகன் என்று பார்த்தால் ஆடுகளம் நரேன்தான். அவருக்கு ஜோடியாக அதாவது நாயகியாக விஜயலட்சுமி நடித்துள்ளார். குறும்பட இயக்குனர் எஸ்.கல்யாண் என்பவர் இயக்கி உள்ளார். இனி நல்ல கேரக்டர்களில் நடித்து சினிமாவில் அடுத்த ரவுண்ட் வர விஜயலட்சுமி முடிவு செய்துள்ளார்.