Advertisement

சிறப்புச்செய்திகள்

பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இன்று 12 படங்கள் ரிலீஸ்!

10 அக், 2014 - 13:02 IST
எழுத்தின் அளவு:

இந்த ஆண்டு ஒரு சில வாரங்கள் தவிர மற்ற வாரங்களில் 4 முதல் 8 படங்கள் வரை சராசரியாக வெளிவந்து கொண்டிருந்தது. இதுவரை 150 நேரடி படங்களும், டப்பிங் படங்களையும் சேர்த்து 210 படங்கள் வரை வெளிவந்திருப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது. இது தமிழ் சினிமா சரித்திரத்திலேயே சாதனை அளவாகும்.


இதற்கு சிகரம் வைத்தாற்போல இன்று (அக் 10) 12 படங்கள் வெளியாகியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு வரை 16 படங்கள் வரை ரிலீசாவதாக இருந்தது. வங்ககரை, பண்டுவம் போன்ற சில படங்கள் கடைசி நேரத்தில் தள்ளிப்போனதால் இறுதியாக இன்று 12 படங்கள் ரிலீசாகி உள்ளது.


நேரடி படங்கள் 8


இன்று வெளியான 12 படங்களில் 8 படங்கள் நேரடி தமிழ் படங்கள். அதில் சரத்குமார் நடித்த நீ நான் நிழல், செந்தில், விஜயலட்சுமி நடித்த வெண்ணிலா வீடு மட்டுமே தெரிந்த முகங்கள் நடித்த படங்கள். மற்ற அனைத்தும் புதுமுகங்கள் நடித்து, தயாரித்து, இயக்கிய படங்கள். குறையன்றுமில்லை, புளிப்பு இனிப்பு, ஆலமரம், ஜமாய், யாவும் வசப்படும், குபீர் ஆகிய படங்கள் புதுமுகங்களின் படங்கள்.


டப்பிங் படங்கள்


இன்று நான்கு டப்பிங் படங்கள் வெளிவந்துள்ளது. இதில் பெர்முடா டென்டாகிள்ஸ் என்ற ஹாலிவுட் படம் 2014 ருத்ரம் என்ற பெயரிலும், அன்னபெல்லே, டிராகுலா படங்கள் அதே பெயரிலும் வெளிவந்துள்ளது. இதுதவிர டாப்ஸி தெலுங்கில் நடித்த படம் பொலிட்டிக்கல் ரவுடி என்ற பெயரில் வெளிவந்துள்ளது.


அடுத்த வாரம்


இதேபோன்ற நிலை அடுத்த வாரமும் (அக் 17) நீடிக்கும் என்று தெரிகிறது. காரணம் தீபாவளிக்கு பெரிய படங்கள் ரிலீசாவதால் அதிலிருந்து குறைந்தபட்சம் 2 அல்லது மூன்று வாரங்களுக்கு சிறிய படங்கள் ரிலீசாகாது. அதனால் தயாராக இருக்கும் சிறுபட்ஜெட் படங்கள் தீபாவளிக்கு முன்பு வெளிவர திட்டமிடுகின்றன.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in