தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஷாரூக்கான் தற்போது தனது ஹேப்பி நியூ இயர் படத்தின் புரொமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். அதேசமயம் தனது அடுத்த படத்திற்கான வேலைகளிலும் இறங்கிவிட்டார். ஹேப்பி நியூ இயர் படத்திற்கு அடுத்தப்படியாக ஷாரூக்கான், யாஸ்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில், மனீஷ் சர்மா இயக்கும், ''பேன்'' படத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தில் ஷாரூக்கான் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். ஒருவர் சூப்பர் ஸ்டார், மற்றொருவர் சாதாரண மனிதர்.
படத்தின் அறிமுக காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. அதில், சூப்பர் ஸ்டாரான ஷாரூக், தனது பிறந்தநாளை, மனாத்தில் உள்ள தனது ஆடம்பர வீட்டில் வெகு விமரிசையாக கொண்டாடுவது போன்றும், மற்றொரு ஷாரூக், சூப்பர்ஸ்டாரின் பிறந்தநாளை கொண்டாட்டத்தை வியந்து பார்ப்பது போன்றும் படமாக்கினர். ஆனால் இந்தக்காட்சியை மான்யாத்தில் வைத்து படமாக்கினால் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் வரும் என்பதால் மும்பை பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைத்து சுமார் 700 பேர் குழுமியிருக்க படமாக்கினர்.
பேன் படத்தில் ஷாரூக்கான் இரட்டை வேடத்தில் நடிப்பதால், ஹீரோயின்களும் இரண்டு பேர் என்பது தெளிவாகியுள்ளது. ஆனால் ஷாரூக் உடன் ஜோடி போடப்போவது யார் என்பது தான் இன்னும் முடிவாகவில்லை. இலியானா, ப்ரணீதி, ராணி முகர்ஜி, வாணி கபூர் இவர்களில், இரண்டு பேர் நடிக்கலாம் என தெரிகிறது.
பேன் படம் அடுத்தாண்டு ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.