ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'நான் ஈ' படத்தின் இயக்குனரான எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கில் 2010ம் ஆண்டு வெளிவந்த வெற்றிப் படம் 'மரியாத ராமண்ணா'. தெலுங்கின் முன்னணி நகைச்சுவை நடிகரான சுனில் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். அதன் பின் இந்தப் படம் கன்னடத்தில் 'மரியாதே ராமண்ணா' என்றும், பெங்காலியில் 'ஃபான்டி போரியா போகா கான்டி ரே' என்றும், ஹிந்தியில் அஜய் தேவகன், சோனாக்ஷி சின்ஹா நடிக்க 'சன் ஆப் சர்தார் என்றும், தமிழில் சந்தானம் நடிக்க 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' என்ற பெயரிலும் ரீமேக் செய்யப்பட்டது.
தமிழில் சந்தானம் நாயகனாக நடித்ததால் இந்தப் படத்தை மிகவும் எதிர்பார்த்தார். ஆனால், படம் இங்கு தோல்விதான் அடைந்தது. தற்போது இந்தப் படத்தை மலையாளத்தில் ரீமேக் செய்து கொண்டிருக்கிறார்கள். 'இவன் மரியாதை ராமன்' என்ற பெயரில் உருவாகி வரும் இந்தப் படத்தை புதியவரான சுரேஷ் திவாகர் இயக்கி வருகிறார். திலீப் இந்தப் படத்தில் கதாநாயகனாகவும், நிக்கி கல்ரானி கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள். நிக்கி கல்ரானி இதற்கு முன் சில மலையாளப் படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் ஆதி நடிக்கும் 'யாகாவாராயினும் நா காக்க' படம் மூலம் தமிழிலும் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
'இவன் மரியாதை ராமன்' படத்திற்கு தமிழைப் போல் அல்லாமல், தெலுங்கில் கிடைத்த வெற்றி போலவே கிடைக்கட்டும்.