இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஸ்ரீதிவ்யா, சூரி மற்றும் பலர் நடிக்க அறிமுக இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்து தமிழில் பல கோடிகளை அள்ளிக் குவித்த படம் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்'. இப்படம் தெலுங்கில் 'கரன்ட் டீகா' என்ற பெயரில் மஞ்சு மனோஜ், ராகுல் ப்ரீத் சிங், ஜெகபதி பாபு மற்றும் பலர் நடிக்க ரீமேக் செய்யப்பட்டது. தமிழில் அனைவரும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும்படியான 'யு' சர்டிபிகேட் பெற்ற படமாக அமைந்தது. ஆனால், தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்ட 'கரன்ட் டீகா' படத்திற்கு 'ஏ' சர்டிபிகேட்தான் வழங்கியிருக்கிறார்கள்.
தெலுங்கில் பிந்து மாதவி நடித்த கதாபாத்திரத்தில் சன்னி லியோன் நடித்திருக்கிறாராம். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படு கிளாமராக படமாக்கியிருப்பதாகத் தகவல். அது மட்டுமல்ல அவர் நடனமாடும் ஒரு பாடல் காட்சி பற்றித்தான் தெலுங்குத் திரையுலகில் அதிகமான பேச்சு வேறு எழுந்துள்ளது. படத்தைப் பார்த்த சென்சார் குழுவினர் படத்தில் இடம் பெற்றுள்ள சில ரத்தம் தெறிக்கும் சண்டைக் காட்சிகளை நீக்கினால் 'யு' சர்டிபிகேட் தருவதாகச் சொன்னார்களாம். ஆனால், அந்தக் காட்சிகள் படத்திற்கு முக்கியமானவை என்பதால் படக்குழுவினர் அவற்றை நீக்க மறுத்திருக்கிறார்கள். எனவேதான், படத்திற்கு 'ஏ' சர்டிபிகேட் கிடைத்தது என்கிறார்கள். இந்தப் படத்தின் டிரைலரிலேயே ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
அடுத்த வாரம் படம் வெளியாக உள்ளது.