இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தினேஷ் நடித்த அட்டகத்தி படத்தை இயக்கியவர் பா.ரஞ்சித். அந்த படம் மெகா ஹிட்டானது. அதையடுத்து தற்போது கார்த்தியை வைத்து அவர் இயக்கியுள்ள மெட்ராஸ் படம் மெகா ஹிட்டாகியுள்ளது. படத்தின் மேக்கிங் பெரிய அளவில் பேசப்பட்டு வருவதோடு, ரஜினிகாந்த் உள்ளிட்ட சில பிரபலங்களே படத்தை பாராட்டியிருப்பதால் உற்சாகத்தில் இருக்கிறார் ரஞ்சித்.
அதோடு, அடுத்த படத்தை இன்னும் சிறப்பான கதையில் இயக்க வேண்டும். இந்த நற்பெயரை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் அவர், அந்த படத்தில் நடிப்பதற்கு ஆர்யாவை செலக்ட் பண்ணியிருப்பதாக கூறப்படுகிறது. மலைவாழ் மக்களைப் பற்றிய கதையில் உருவாகும் அந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கும் நடிகை தேர்வும் நடக்கிறதாம். இந்த படத்தையும் மெட்ராஸ் படத்தை தயாரித்த ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்தான் தயாரிக்கிறதாம்.
மேலும், தற்போது எஸ்.பி.ஜனநாதனின் புறம்போக்கு, மகிழ்திருமேனியின் மீகாமன், விஷ்ணுவர்தனின் யட்சன் ஆகிய படங்கள் எல்லாமே கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருப்பதால், அடுத்து ஏற்கனவே தன்னை வைத்து பாஸ் என்ற பாஸ்கரன் படத்தை இயக்கிய ராஜேஷ்.எம் இயக்கும் படத்தில் நடிக்கும் ஆர்யா, அதே சமயத்தில் ரஞ்சித் படத்திற்கும் கால்சீட் கொடுத்து நடிப்பார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.