Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆர்யா - தமன்னா நடிக்கும் படம் பற்றி இயக்குநர் ராஜேஷ்.எம் விளக்கம்

09 அக், 2014 - 17:15 IST
எழுத்தின் அளவு:

தமன்னா கடைசியாக தமிழில் நடித்த வீரம் படம் மிகப்பெரிய வெற்றியடைந்தும் அவருக்கு பலனில்லாமல் போய்விட்டது. தமிழில் தமன்னாவுக்கு புதுப்பட வரவுகள் கிடைக்கவில்லை. எனவே மனசளவில் நொந்துபோயிருந்தவருக்கு ஆறுதலாக கிடைத்திருக்கிறது ஆர்யாவின் பட வாய்ப்பு. சிவா மனசுல சக்தி மூலம் இயக்குநராக அறிமுகமாகி முதல் படத்திலேயே வெற்றியை ருசித்த ராஜேஷ் எம். இப்படத்தை இயக்குகிறார். ராஜேஷ் எம். இயக்கிய இரண்டாவது படம் பாஸ் (எ) பாஸ்கரன். ஆர்யா, நயன்தாரா, சந்தானம் நடித்த இப்படமும் சூப்பர்ஹிட்டாகி, முன்னணி இயக்குநர்கள் வரிசையில் இடம்பிடித்தார் ராஜேஷ் எம்.



இதை அடுத்து ராஜேஷ் எம். இயக்கிய ஒரு கல் ஒரு கண்ணாடி படமும் ஹிட்டானது. அடுத்து இயக்கிய, அழகுராஜா படுதோல்வியடைந்ததால் காணாமல்போனார் ராஜேஷ்.எம். அவரது கஷ்டநிலையை கருத்தில் கொண்டு அவருக்கு கால்ஷீட் கொடுத்ததோடு அந்தப்படத்தையும் தானே தயாரிக்கிறார் ஆர்யா. முதலில் இப்படம் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகம் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால், இது இரண்டாம் பாகம் இல்லை என்பதை மறுக்கிறார் ராஜேஷ் எம்.


நான் தற்போது உருவாக்கிக் கொண்டிருக்கும் ஸ்கிரிப்ட் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் இரண்டாம் பாகம் அல்ல. இது முற்றிலும் புதிய ஒரு கதை. இதில் ஆர்யா, தமன்னா, சந்தானம் ஆகியோர் நடிக்கிறார்கள். ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது! என்று தெளிவுபடுத்தி இருக்கிறார் ராஜேஷ் எம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in