'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ்சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஸ்ரீதிவ்யா. அதற்கு முன் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும், அப்படங்கள் வெளிவராமல் முடங்கிக்கிடந்தநிலையில், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஒப்பந்தமானார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பள்ளி மாணவி கேரக்டரில் நடித்திருந்தார் ஸ்ரீதிவ்யா.
கடந்த வாரம் வெளியான ஜீவா படத்திலும் ஸ்கூல் கேர்ள் ஜெனியாக விஷ்ணுவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் ஸ்ரீதிவ்யா. இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக அறிமுகமாகும் பென்சில் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார் ஸ்ரீதிவ்யா. பென்சில் படத்திலும் ஸ்ரீதிவ்யாவுக்கு பள்ளி மாணவி வேடம்தான். தொடர்ந்து மூன்று படங்களில் பள்ளி மாணவியாக நடித்த ஒரே கதாநாயகி ஸ்ரீதிவ்யாதான்.
18 வயது ஸ்ரீதிவ்யா, தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாணா படத்திலும், அதர்வாவுக்கு ஜோடியாக ஈட்டி படத்திலும், விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக வெள்ளக்கார துரை படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த மூன்று படங்களிலும் ஸ்ரீதிவ்யாவுக்கு என்ன வேடம்? சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்து வரும் டாணா படத்தில் நர்ஸ் கேரக்டரில் நடிக்கிறார் ஸ்ரீதிவ்யா. மற்ற படங்களிலும் தன் வயசுக்கேற்ற வேடங்களில் மட்டும் நடித்து வருகிறாராம். மெச்சூர்டான வேடங்கள் தேடி வந்தால் மறுத்துவிடுகிறார்.