பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
காதல் அழிவதில்லை படத்தில் டி.ராஜேந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் ஷார்மி. அடடா எத்தனை அழகு, காதல் கிசுகிசு, லாடம் படங்களில் நடித்தார். தமிழில் வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் தெலுங்கில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார்.
தற்போது ஷார்மி விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் பத்து எண்றதுக்குள்ள படத்தில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போடுகிறார்.
இந்தியா முழுவதும் பயணிக்கிற இந்த கதையில் விக்ரம் புனே செல்வது போலவும் அங்கு ஒரு இரவு தாபாவில் பொழுதை கழிப்பதைப்போலவும் காட்சி இருக்கிறது. இந்த காட்சியில்தான் ஷார்மி ஆடுகிறார். இதற்காக புனேவில் 2 கோடி ரூபாய் செலவில் ஷெட் போடப்பட்டிருப்பதாக பட வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
இந்த பாடல் மற்ற குத்துப் பாடல்களை போன்று இல்லாமல் வித்தியாசமாக படமாக்கப்பட இருக்கிறதாம். ஷார்மி ஆட்டம் ஆடுவதுடன். இந்த பாட்டுக்குள்ளேயே ஒரு நாடகம் நடக்கிறது அந்த நாடகத்தில் ஷார்மி ஒரு கேரக்டராக வருகிறாராம். 9 நிமிடங்கள் இடம்பெறும் இந்த பாடல் பரபரப்பாக பேசப்படுமாம். இந்த பாடலுடன் பத்து எண்றதுக்குள்ள படப்பிடிப்பு முடிகிறது என்கிறார்கள். பாடலின் படப்பிடிப்புகள் இந்த மாதம் 20ந் தேதி தொடங்குகிறது.