தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் ஷாரூக்கான் தற்போது, தான் நடித்துள்ள ஹேப்பி நியூ இயர் படத்தின் புரொமோஷன் வேலைகளில் தீவிரமாக இருக்கிறார். பராகான் இயக்கத்தில் ஷாரூக், தீபிகா, அபிஷேக், போபன் இரானி, சோனு சூட், விவன் ஷா என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. அமெரிக்காவில் ஹேப்பி நியூ இயர் படத்தின் புரொமோஷனை முடித்துவிட்ட ஹேப்பி நியூ இயர் படக்குழு, தற்போது லண்டனில் முகாமிட்டுள்ளனர்.
இந்நிலையில், இப்போது ஷாரூக்கானின் அடுத்தபடம் பற்றிய பேச்சுக்கள் ஆரம்பித்துவிட்டன. ஹேப்பி நியூ இயர் படத்திற்கு பிறகு ஷாரூக்கான், யாஸ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில், மனீஷ் சர்மா இயக்கத்தில், ''ஃபேன்'' என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தில் ஷாரூக்கான் ஜோடியாக இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்களாம். அதில் ஒருவர் இலியானா என்று கூறப்படுகிறது.
இதனிடையே ''ஃபேன்'' படம் பற்றி ஷாரூக்கான் அளித்த பேட்டி ஒன்றில், நான் யாஸ்ராஜ்பிலிம்ஸ் மற்றும் மனீஷின் ஃபேன். இந்தப்படத்தில் இரண்டு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இந்தப்படம் முற்றிலும் வித்தியாசமான படம், அதனால் பெரிய ஹீரோயின்கள் யாரும் நடிக்கவில்லை. நான் கடந்த 20 ஆண்டுகளில் நடிக்காத ஒரு படம் ஃபேன். நிச்சயம் இந்தப்படம் எனக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தப்படத்தில் நான் எப்படி நடிப்பது என்பது குறித்து தற்போது விவாதித்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.