தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சித்து பிளஸ் 2, நான் ராஜாவாக போகிறேன் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்த சாந்தினி மீண்டும் கதாநாயகியாக பிரவேசம் செய்யும் படம் போர்குதிரை.அறிமுக இயக்குனர் சாய் பிரவீன் இயக்கும் போர்குதிரை 1980-களில் உள்ள காதலையும், உணர்வையும் படம் பிடித்துக் காட்டும் படம். இந்த மண்ணின் மணத்தையும், குணத்தையும் படம் பிடித்துக் காட்டும் படம்.
போர் குதிரை உசிலம்பட்டியை ஒட்டிய பகுதிகளில் பெருமளவுக்கு படமாக்கப்பட்ட படம். இந்த படத்தின் ஜீவ நாடியே படத்தின் நாயகிதான். சாந்தினி, தனது உன்னத நடிப்பால் அந்த கதாபாத்திரத்துக்கு உயிர் தந்து இருக்கிறார். தமிழ் வசனங்களை அட்சரம் பிசகாமல் அவர் உச்சரித்தது ஒரு இயக்குனராக என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆற்றுகிறது. ஒரு காட்சி படமாக்கப்படும் போது மற்றவர்களுக்கு சரி என்று பட்டாலும் இன்னமும் நல்லா பண்ணி இருக்கலாம் இல்ல சார், என்று கேட்பதே அவர் இன்னமும் உயர்ந்த நிலைக்கு வருவார் என்பதற்கு சான்று. போர்குதிரை படத்தில் அவரது கதாபாத்திரம் நிச்சயம் பேசப்படும் என்றுக் கூறினார் இயக்குனர் சாய் பிரவீன்.