விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தில் அறிமுகமானவர் பூர்ணா, கந்த கோட்டை, துரோகி, வேலூர் மவாட்டம், வித்தகன் உள்பட பல படங்களில் நடித்தார். ஆனால் அவருக்கு பெரிய ஹிட் எதுவும் அமையவில்லை. தெலுங்கு கன்னடத்தில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். பட வாய்ப்புகள் குறைவதால் நடனப் பள்ளி துவங்க முடிவு செய்திருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: நான் முறைப்படி நடனம் கற்றிருக்கிறேன். தற்போது மேடைகளிலும் ஆடியும் வருகிறேன். எனது திறமையை மற்றவர்களுக்கும் சொல்லித்தர நடன பள்ளி ஒன்று தொடங்க முடிவு செய்திருக்கிறேன். இது எனது நீண்ட நாள் ஆசை, கேரளாவில் உள்ள எனது சொந்த ஊரான கண்ணனூரில் தொடங்க என் தந்தை ஏற்பாடு செய்து வருகிறார்.
சினிமாவில் வாய்ப்பு குறைந்து விட்டதால் நடன பள்ளி தொடங்குவதாக சொல்வது தவறு. இது எனது நீண்ட நாள் திட்டம் இப்போது செயல்பாட்டுக்கு வருகிறது. மற்றபடி நான் தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறேன். என்கிறார் பூர்ணா.