பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் ப்ரியா. சீசன்-3 யில் இவரது ஆட்ட திறமை அனைவரையும் வியக்க வைத்தது. அதன் பிறகு சீசன் 4ல் 4வது ரவுண்ட் வரையும் வந்தார். இதனால் சரவணன் மீனாட்சி தொடரில் நடிக்க வாய்ப்பு வந்தது. நடிப்பு, ஆட்டம என்ற இரண்டு பாதையிலும் பயணம் செய்தார். ஜோடி சீசன் 7ல் கடைசி ரவுண்ட் வரை வந்தவருக்கு காலில் காயம் ஏற்படவே டைட்டில் கிடைக்கவில்லை. இதனால் மனம் வெறுத்துப்போன ப்ரியா, இனி ஆடுவதில்லை என்று முடிவு செய்திருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: டான்சுல எனக்கு திறமை இருக்கிற அளவிற்கு அதிர்ஷ்டம் இல்லை. இல்லேன்னா இரண்டு ஷோவில் பைனல் வரைக்கும் வந்து டைட்டில் வாங்க முடியாம போகுமா? அதனால் தான் இனி ஆடியது போதும் நடிப்பு மட்டும் போதும்ங்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். ஆனாலும் பாடுவதையும் விட மாட்டேன். என்கிறார் ப்ரியா