ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
புதுமுகமாக வரும் நடிகர், நடிகைகள் அறிமுகமாகும் போது பத்திரிகை உள்ளிட்ட மீடியா நண்பர்களிடம் தனக்கு சப்போர்ட் பண்ணுங்க என்று சொல்வது வாடிக்கைதான். ஆனால், ஒரு படம் கொஞ்சம் ஓடி, நல்ல பெயர் எடுத்துவிட்டால் போதும் அடுத்து அவர்கள் செய்யும் ஆர்ப்பாட்டம் தாங்கமுடியாது. அந்த வரிசையில் கொஞ்ச நாளிலே சேர்ந்தவர் ஸ்ரீ திவ்யா. வருத்தபடாத வலிபர் சங்கம் பட வெற்றியை தொடர்ந்து, கையில் 5 படங்கள் வைத்திருக்கிறார். அதற்குள் தயாரிபாளர்களிடம், அந்த ஸ்டார் ஹோட்டலில் தான் தங்குவேன், சாதாரண ஹோட்டல்களில் தங்கமாட்டேன், சம்பளம் இவ்வளவு தர வேண்டும் என்று கறாராக இருக்கிறார். சமீபகாலமாக இவர் கால்ஷீட்டை சொதப்புவதாகவும் பென்சில் உள்ளிட்ட பட குழுவினர் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி, பத்திரிகையாளர்கள் ஏதாவது பேட்டி கேட்டாலோ, அல்லது அவரது பட சம்பந்தப்பட்ட விஷயங்களை பற்றி அறிய போன் செய்தால் கூட அவர்களை மதிப்பது கிடையாது. சுமார் 100 முறை போன் செய்தால் கூட அதற்கு ஒரு ரிப்ளே கூட கொடுப்பது கிடையாது. சினி பீல்ட்டில் வளர்ந்து வரும் ஒரு நடிகை இதுபோன்று நடப்பது நல்லதல்ல என்று பலரும் அறிவுரை செய்கின்றனர். ஆனால் அதையெல்லாம் அவர் காதில் வாங்கி கொள்வது கிடையாது.
ஸ்ரீதிவ்யா தனது போக்கை மாற்றுவாரா என்று பார்ப்போம்...!