ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஷாகித் கபூர் நடிப்பில், கடந்தவாரம் வெளியான படம் ஹைடர். இந்தப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஷாகித் கபூரின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். சமீபத்தில் இப்படத்தை பார்த்து அமிதாப் பச்சன், ஹிருத்திக் ரோஷன் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களும் ஷாகித்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இப்போது பாலிவுட் நடிகையான சோனாக்ஷி சின்ஹாகவும், ஷாகித் கபூரின் நடிப்பை பார்த்து பாராட்டியுள்ளார். ஹைடர் படத்தை பார்த்து விட்டு தனது டுவிட்டரில் இப்படி கூறியிருக்கிறார். ஹைடர் படத்தை பார்த்தேன், ஷாகித் கபூர் படம் முழுக்க எல்லா காட்சிகளிலும் அற்புதமாக நடித்துள்ளார் என்று கூறியுள்ளார்.
சோனாக்ஷியின் பாராட்டுக்கு ஷாகித் கபூர், தன் டுவிட்டர் பக்கத்தில் நன்றி சோனா என்று கூறியுள்ளார்.