'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழில் வெற்றி பெறும் படங்களை தெலுங்கில் ரீமேக் செய்வதும், தெலுங்கில் வெற்றி பெறும் படங்களை தமிழில் ரீமேக் செய்வதும் ஆண்டாண்டு காலமாக நடந்து வருகிறது. அந்த வரிசையில் தமிழ்த் திரையுலகில் சிவகார்த்திகேயனுக்கு நல்ல அடையாளத்தைக் கொடுத்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து முடித்துள்ளனர்.
தமிழில் 2013ம் ஆண்டின் மாபெரும் வெற்றிப் படமான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படம் தெலுங்கில் 'கரன்ட் டீகா' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. மஞ்சு மனோஜ், ராகுல் ப்ரீத் சிங், ஜெகபதி பாபு, சன்னி லியோன் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். மஞ்சு விஷ்ணு நடித்த 'டேனிகைன ரெட்டி' படத்தை இயக்கி நாகேஷ்வர் ரெட்டி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்த மாதம் 17ம் தேதி இப்படம் வெளியாகும் என்று தெரிகிறது.
தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த கதாபாத்திரத்தில் மஞ்சு மனோஜும், ஸ்ரீதிவ்யா கதாபாத்திரத்தில் ராகுல் ப்ரீத் சிங்கும், சத்யராஜ் கதாபாத்திரத்தில் ஜெகபதி பாபுவும், பிந்து மாதவி நடித்த கதாபாத்தித்தில் சன்னி லியோனும் நடித்துள்ளார்கள். சன்னி லியோன் நடித்த ஒரு பாடல் காட்சிக்காக மட்டும் சுமார் 1 கோடிக்கும் மேல் செலவு செய்து படமாக்கியுள்ளார்களாம். இப்படத்தின் இசை மற்றும் டிரைலருக்கு தெலுங்குத் திரையுலகில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம். கண்டிப்பாகத் தெலுங்கிலும் இந்தப் படம் வசூல் சாதனை புரியும் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.