ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
எதைப் பற்றியும் கவலைப்படாமல் கண்டபடி கமெண்ட் அடிப்பது, சர்ச்சைக்குரிய படங்களை இயக்குவது, தயாரிப்பது என எப்போதுமே செய்திகளில் அடிபடும் சர்ச்சைக்குரிய மனிதராகவே இருந்து வருகிறார் ராம்கோபால் வர்மா. இவருடைய அடுத்த படம் 'சாவித்ரி' என அப்படத்தின் முதல் பார்வை போஸ்டர்கள் மீடியாக்களில் வெளியிடப்பட்டும், ஹைதராபாத் தெருக்களிலும் ஒட்டப்பட்டும் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. அந்த முதல் பார்வை போஸ்டர்களில் புடவை அணிந்த ஒரு இளம் பெண் அவருடைய இடுப்புப் பகுதியையும், வயிற்றுப் பகுதியையும் ஆபாசமாக காட்டியபடி இருக்க, ஒரு சிறுவன் அவற்றை ஆசையுடன் பார்ப்பது போன்ற அந்தத போஸ்டர்கள் கடும் கண்டனத்தை எழுப்பின. அதையடுத்து ராம்கோபால் வர்மா படத்தின் பெயரை 'ஸ்ரீதேவி' என மாற்றிவிட்டார்.
சில காரணங்களுக்காக 'சாவித்ரி' என்ற பெயரை 'ஸ்ரீதேவி' என மாற்றியதாகவும், இனி ராம்கோபால் வர்மாவின் 'ஸ்ரீதேவி' என அழைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த போஸ்டரைப் பார்க்கும் யாராக இருந்தாலும் கண்டிப்பாக கோபப்படுவார்கள். சில வருடங்களுக்கு முன் வரை வெளிவந்த சில காலைக்காட்சி மலையாளப் படங்களின் போஸ்டரைப் போலத்தான் 'ஸ்ரீதேவி' படத்தின் போஸ்டரும் அமைந்துள்ளது. 'சாவித்ரி' என்ற பெயருக்கும் எதிர்ப்பு எழுந்ததால்தான் அவர் 'ஸ்ரீதேவி' என்று பெயரை மாற்றினார் என்கிறார்கள். ஆனால், ராம்கோபால் வர்மாவின் அபிமான நடிகையான ஸ்ரீதேவி அதற்கு ஏதாவது எதிர்ப்பு தெரிவிப்பாரா என்பது இனிமேல்தான் தெரியும்...