ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் |
இங்கிலாந்தில் உள்ள ஸ்காட்லாந்தில், ரஜினி நடிக்கும் லிங்கா படத்தின் படப்பிடிப்புகள் நடக்க இருக்கிறது. இங்கு 2 பாடல் காட்சிகளை படமாக்க கே.எஸ்.ரவிகுமார் திட்டமிட்டுள்ளார். இதற்காக ஸ்காட்லாந்து சுற்றுலாத் துறையிடமும், காவல் துறையிடமும் முறையான அனுமதி பெற்றுள்ளனர்.
இதுகுறித்து ஸ்காட்லாந்து சுற்றுலாத்துறை உயர் அதிகாரி சாரா டிம்மண்ட் கூறியிருப்பதாவது: இதுவரை ஹாலிவுட் படங்களின் படப்பிடிப்புகள் மட்டுமே நடந்துள்ள இடத்தை லிங்கா படப்பிடிப்புக்காக தேர்வு செய்துள்ளனர். ஹாலிவுட் படங்களின் ஷூட்டிங் நடந்ததால் சினிமாவில் அந்த இடங்களை பார்த்தவர்கள் நேரில் பார்க்க வந்தார்கள். இதனால் ஸ்காட்லாந்தின் சுற்றுலாத்துறை வளர்ச்சி அடைந்தது.
லிங்கா படப்பிடிப்புக்கு பிறகு இந்தியாவில் இருந்து நிறைய சுற்றுலா பயணிகள் வருவார்கள் என்று கருதுகிறோம். விடுமுறைக்காலங்களில் இந்திய இளைஞர்களின் விருப்பமான இடமாக எங்கள் பகுதி தேர்வு செய்யப்படலாம். அந்த வகையில் ரஜினியின் படப்பிடிப்பு எங்கள் பகுதியில் நடப்பது எங்களுக்கு பெருமை தருவதாகும். படப்பிடிப்புக்கு தேவையான உதவிகளை ஸ்காட்லலாந்து சுற்றுலாத்துறை செய்து கொடுக்கும். என்று கூறியுள்ளார் சாரா.