‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
தொடர் தோல்விகளை சந்தித்து வந்த கார்த்திக்கு வெற்றியை கொடுத்துள்ள படம் ''மெட்ராஸ்''. அட்டகத்தி ரஞ்சித்தின் இரண்டாவது படமான இதில் கார்த்தி ஜோடியாக கேத்ரீன் தெரஸா நடித்திருந்தார். வட சென்னை ஏரியாவில், ஒரு சுவரை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்திற்கு நெகட்டீவ் கமெண்ட்கள் வந்தாலும், பலரும் இப்படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். குறிப்பாக திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர். அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மெட்ராஸ் படத்தை பார்த்து கொடுத்து இருக்கும் பாராட்டு, கார்த்தி, ரஞ்சித் உள்ளிட்ட படக்குழுவினரை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.
மெட்ராஸ் படத்தை பார்த்துவிட்டு ரஜினி, சூப்பர் கண்ணா சூப்பர் கலக்கிட்ட... எப்படி கண்ணா இப்படி ஷூட் பண்ண... சூப்பர் கண்ணா கலக்கிட்ட... என்று கூறியுள்ளார்.