இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
மஞ்சப்பை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விமல் நடிப்பில் வெளிவர தயார் நிலையில் இருக்கும் படம் ''ஒரு ஊர்ல ரெண்டு ராஜா''. இப்படத்தில் அவருடன் ப்ரியா ஆனந்த், விசாகா சிங், சூரி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை அக்டோபர் 2-ம் தேதியே வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், அக்டோபர்-2ம் தேதி ஜீவாவின் யான் ரிலீசானதோடு, அதற்கு முந்தைய வாரம் வெளியான ஜீவா, மெட்ராஸ் ஆகிய படங்களும் முக்கிய தியேட்டர்களில் ஹவுஸ்புல்லாக ஓடிக்கொண்டிருந்ததால் எதிர்பார்க்கிற தியேட்டர்கள் எதுவும் கிடைக்கவில்லையாம். அதனால்தான் இந்த நெருக்கடியான நேரத்தில் படத்தை வெளியிட்டு தோல்வியை சந்திக்க வேண்டாமே என்று ரிலீஸ் தேதியை மாற்றியுள்ளனர்.
அப்படியென்றால் தீபாவளிக்கு வெளியாகுமா என்றால் அதுவும் இல்லையாம். தீபாவளிக்கு ஐ, கத்தி, பூஜை என மூன்று மெகா படங்கள் வருவதால், அந்த அதிரடியில் விமல் தாக்குப்பிடிக்க மாட்டார் என்பதோடு, அந்த படங்களெல்லாமே கிட்டத்தட்ட ஒரு மாதம் காலம் வரை தியேட்டர்களை விட்டு வெளியேறுவது கடினம் என்பதால், தீபாவளி படங்கள் வெளியாகி ஒரு மாதம் கழித்துதான் விமலின் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா தியேட்டர் பக்கம் வருவார் என்கிறார்கள்.
இருப்பினும், அதற்கு முன்னதாக தாங்கள் எதிர்பார்க்கிற தியேட்டர்கள் கிடைத்தால் விமல் படைத்தை வெளியிடும் முயற்சியிலும் இறங்கி விடுவார்களாம்.