பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நந்தா பாடத்தில் லொடுக்கு பாண்டி என்ற வேடத்தில் பாலா அறிமுகப்படுத்திய நகைச்சுவை நடிகர் - கருணாஸ். அப்படத்தில் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் திரையுலகின் கவனத்தை ஈர்த்தார். நந்தா படத்தை அடுத்து அவருக்கு ஏராளமான படங்கள் ஒப்பந்தமாகி, விரைவிலேயே பிஸியான நகைச்சுவை நடிகராக உயர்ந்தார். வடிவேலு, விவேக், சந்தானம் என முன்னணி நகைச்சுவை நடிகர்கள் ஒரு பக்கம் பட்டையைக்கிளப்பிக் கொண்டிருக்க, கருணாஸோ சத்தமில்லாமல் ஏராளமான சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து செமத்தியாய் சம்பாதித்து வந்தார்.
காமெடியனாக நடித்து வந்த கருணாஸ் ஒருகட்டத்தில் ஹீரோவாக ஆசைப்பட்டு தன் பாதையை மாற்றினார். திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி, ரகளபுரம், சந்தமாமா என கருணாஸ் ஹீரோவாக நடித்த படங்கள் எதுவுமே ஓடவில்லை. இன்னொரு பக்கம், அவர் ஹீரோவாக நடிக்கத் தொடங்கியதால் காமெடியனாக நடிக்கவும் மறுத்தார். கருணாஸ் ஹீரோவாக நடித்த படங்கள் தோல்வியடைந்ததால் அவரை ஹீரோவாக வைத்து படம் எடுக்க யாரும் முன் வரவில்லை. அதுமட்டுமல்ல, அவரை காமெடியனாகப் போட்டு படம் எடுக்கவும் யாரும் முன் வரவில்லை. இதனால் அவருக்கு பட வாய்ப்பு இல்லாமலே போனது. கடந்த சில மாதங்களாக கையில் படங்கள் இல்லாமல் இருந்தார் கருணாஸ். இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக நடிக்கும் டார்லிங் என்ற பேய்ப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கிறார் கருணாஸ்.