கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
குழந்தைகளின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள படம் குற்றம் கடிதல். குழந்தைகளை குற்றவாளிகளாக அறிவித்து அவர்களின் வாழ்க்கையை நசுக்கிற கொடுமையை சொல்லும் படம். ஜி.பிரம்மா என்பவர் இயக்கி இருக்கிறார் எஸ்.மணிகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சங்கர் ரங்கராஜன் இசை அமைத்துள்ளார். அஜய், ராதிகா, பிரசித்ரா, சாய் ஆகிய குழந்தை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்த படம் வெளிவருவதற்கு முன்பே ஜிம்பாப்வேயில் நடைபெற இருக்கும் சர்வதேச படவிழாவிலும், மும்பையில் நடைபெற இருக்கும் 16வது எடிசன் திரைப்பட விழாவிலும் கலந்து கொள்ள தேர்வாகி இருக்கிறது.
"அறிமுக இயக்குனரின் படம் என்கிற கேட்டகிரியில் இந்த இரண்டு திரைப்பட விழாக்களுக்கும் குற்றம் கடிததல் தேர்வாகி உள்ளது. அடுத்த மாதம் தியேட்டர்களில் வெளிவரும். பசங்க, கோலிசோடா வரிசையில் வெற்றியும் பெறும்" என்கிறார் படத்தை வா£ங்கியுள்ள தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார்.