Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மேனேஜரை ஏமாற்றிய மோனல் கஜ்ஜார்!

02 அக், 2014 - 10:23 IST
எழுத்தின் அளவு:

வானவராயன் வல்லவராயன், சிகரம் தொடு ஆகிய படங்களில் நாயகியாக நடித்தவர் மோனல் கஜ்ஜார். அதையடுத்து அவருக்கு தமிழில் படங்கள் இல்லை. அதனால் ஏற்கனவே கமிட்டாகியிருந்த தெலுங்கு படங்களில் நடிக்க சென்று விட்டார்.

இந்த நிலையில், மோனல் கஜ்ஜாரை தமிழ் சினிமாவுக்கு கொண்டு வந்த மேனேஜர் மும்பை சான் என்பவர், அவர் தன்னை ஏமாற்றி விட்டதாக புகார் கூறுகிறார். அதுபற்றி அவர் மேலும் கூறுகையில், குஜராத்திலுள்ள அகமதாபாத்தைச் சேர்ந்தவர் மோனல் கஜ்ஜார். அவரை முதலில் கிருஷ்ணா நடித்த வானவராயன் வல்லவராயன் படத்தில் நடிக்க நான்தான் சான்ஸ் வாங்கிக்கொடுத்தேன். அவருக்கு சம்பளமாக 15 லட்சம் பேசப்பட்டது.


அதையடுத்து, விக்ரம் பிரபு நடித்த சிகரம் தொடு படத்தில் நடிக்க 25 லட்சம் சம்பளம் வாங்கிக்கொடுத்தேன். எனக்கு கமிஷனாக 15 சதவிகிதம் பேசப்பட்டது. ஆனால், இரண்டு படத்துக்கும் சேர்த்து வெறும் 25 ஆயிரம் மட்டுமே மோனல் கொடுத்தார். அதன்பிறகு என்னிடம் பிரச்சினை செய்து கொண்டு வெவ்வேறு மேனேஜர்களை தேடிச்சென்றார். அந்த வகையில் எனக்கு பிறகு 11 மேனேஜர்களை நியமித்த மோனல் கஜ்ஜாருக்கு தற்போது ஒரு மேனேஜர்கூட கிடையாது. காரணம், தனக்காக உழைப்பவர்களுக்கு எதுவுமே செய்ய மாட்டார்.


அதோடு, அகமதாபாத்தில் இருந்து சென்னைக்கு வருகிறார் என்றால், அங்கு காரில் ஏறுவதில இருந்து பின்னர் விமானத்தில் ஏறி சென்னைக்கு வருபவர், தான் ஒரு காபி குடித்தால்கூட அதை தயாரிப்பாளர் கணக்கில்தான் எழுதுவார். அதோடு சென்னையில் அவர் பைவ் ஸ்டார் ஹோட்டலில் தங்குகிறார் என்றால், தனக்கு அடுத்த அறையில் தனது உதவியாளர்களும் பைவ் ஸ்டார் ஹோட்டலில்தான் தங்க வேண்டும் என்று அடம் பிடிப்பார். அது மட்டுமில்லாமல், படப்பிடிப்பிலும் சரியாக கலந்து கொள்வதில்லை. அவ்வப்போது வயிற்று வலி. தலைவலி என்று சொல்லிக்கொண்டு ஹோட்டல் அறையிலேயே டேரா போட்ட விடுவார் என்று கூறும் அவர், மோனலின் நிஜ கேரக்டர் பற்றி வெளியில் சொல்லாமல் நான் கமிட் பண்ணி கொடுத்து இரண்டு படங்களிலும் நடிக்க வைத்தேன். ஆனால் இப்போது அவரது கேரக்டர் சினிமா உலகத்துக்கு தெரிந்து விட்டது. அதனால்தான் புதிய படங்களுக்கு யாரும் அவரை ஒப்பந்தம் செய்யவில்லை என்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in