‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஒரு டீச்சர் கேரக்டரில் நடித்த பிந்து மாதவி, அதையடுத்து ஒரு கன்னியும மூணு களவாணியும் படத்திலும் ஒரு கேரக்டரில்தான் நடித்தார். அதையடுத்து, தற்போது கலக்குற சந்துரு, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், வசந்தகுமாரன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இதில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் அட்டகத்தி தினேஷ், நகுல் என இரண்டு ஹீரோக்கள் நடிக்க, பிந்து மாதவியும் நடிக்கிறார். ஆனால், இந்த படத்தில் ஐஸ்வர்யா தத்தா என்ற பெயரில் ஒரு கொல்கத்தா நடிகையும் அறிமுகமாகிறார். கதைப்படி இவருக்குத்தான் முதன்மை நாயகி வேடமாம்.
அதோடு தற்போது மார்க்கெட் இருக்கிற அட்டகத்தி தினேசுக்கு இவர்தான் ஜோடியாம். அதனால், நகுலுககு ஜோடியாக நடிக்கும் பிந்து மாதவி தன்னை செகண்ட் ஹீரோயினாக்கி விட்டதாக பீல் பண்ணிக்கொண்டிருக்கிறாராம். ஆனால், இதற்கு முன்பு நடித்த இரண்டு படங்களிலுமே கேரக்டர் ரோலில் நடித்திருக்கும் பிந்து மாதவிக்கு இந்த படத்தில் அதைவிட பெரிய ரோல்தான் என்று சம்பந்தப்பட்டவர்கள் சொல்கிறார்கள்.
இருப்பினும், கொல்கத்தாவில் இருந்து வந்த புதுமுக நடிகையான ஐஸ்வர்யா தத்தா ஒரு படத்தோடு தன்னை செகண்ட் கிரேடு நடிகையாக்கி விட்டதால் அவரை போட்டி மனப்பான்மையுடன் பார்க்கத் தொடங்கியிருக்கும் பிந்துமாதவி, ஸ்பாட்டில் அவர் தன்னைப்பார்த்தாலே முகத்தை வேறு பக்கமாக வெடுக்கென்று திருப்பிக் கொள்கிறாராம்.