மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பி.கே இந்தி படத்தின் முதல் போஸ்டரில் நிர்வாணமாக போஸ் கொடுத்தார் அமீர்கான். ஒரு முன்னணி நடிகர், பொறுப்பில்லாமல் இந்த மாதிரியெல்லாம் நடிக்கக்கூடாது. அதோடு, இதை பொதுமக்கள் படிக்கும் பத்திரிகைகளில் வெளியிட்டு நாஸ்தி பண்ணக்கூடாது என்றெல்லாம் மும்பையில் ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன.
அதையடுத்து, அமீர்கான் மீது வழக்கும் தொடரப்பட்டது. அதனால் பின்னர் அந்த சர்ச்சையில் இருந்து விடுபட, இரண்டாவது போஸ்டரில் தன் உடம்பில் ஒரு சின்ன பகுதிகூட தெரியாத அளவுக்கு புல்லும் கவர் பண்ணிய ஒரு ஆடை அணிந்து போஸ் கொடுத்திருந்தார் அமீர்கான்.
இருப்பினும், அந்த முதல் போஸ்டர் குறித்து இப்போதும் பாலிவுட் நட்சத்திரங்கள் அமீர்கானைப் பார்த்து கிண்டல் செய்து வருகிறார்களாம். அதில் ஹிருத்திக் ரோஷன், தனது டுவிட்டரில் அமீர்கானிடம், பி.கே படத்தில் நீங்கள் கையில் வைத்திருக்கும் டிரான்ஸ்சிஸ்டரை கீழே வைப்பீர்களா? என்று கிண்டலாக கேள்வி கேட்டுள்ளார்.
அதற்கு பதில் அளிக்கும் விதமாக, ஏன் முடியாது. இதோ செய்து காட்டுகிறேன் என்று சொல்லி தனது இரண்டாவது போஸ்டரை டுவிட்டரில் வெளியிட்டு ஹிருத்திக்கிற்கு பதில் கொடுத்துள்ளார் அமீர்கான்.