தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டின் தற்போதைய பிரபல நடிகைகளுள் அலியா பட்டும் ஒருவர். ராஞ்ஜனா இந்தி படத்தில் நடிக்க சென்றபோது இவர் நடித்த சில படங்களை பார்த்த தனுஷ் அசந்து போனாராம். அதிலிருந்தே அலியாபட்டுடன் நடிக்க வேண்டும் என்ற ஆர்வமும் அவருக்கு தலை தூக்கி விட்டதாம். அதனால்தான் அதன்பிறகு கே.வி.ஆனந்தின் இயக்கத்தில் தான் நடிக்கயிருந்த அனேகன் படத்தில் நடிக்க அலியாபட்டிடம் பேசினார் தனுஷ்.
ஆனால், இந்தியில் மூச்சுவிடக்கூட நேரமில்லை என்று சொல்லி அந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டார் அலியாபட். அதனால்தான் அமீரா என்ற வளர்ந்து வரும் இந்தி நடிகை அனேகனுக்கு ஒப்பந்தம செய்யப்பட்டார். இருப்பினும் அலியாபட்டுடன் நடிக்க முடியவில்லையே என்கிற மனக்குறை தனுசுக்கு இருந்து கொண்டேயிருந்தது.
அதனால் அதற்கான நேரம் பார்த்துக்கொண்டேயிருந்த அவர், தற்போது வேலையில்லா படடதாரி படத்தின் இந்தி ரீமேக்கில் தனக்கு ஜோடியாக நடிக்க மீண்டும் அலியாபட்டிடம் பேசியிருக்கிறாராம். ராஞ்ஜனா படத்தில் நடித்தபோது இந்திக்கு தனுஷ் புதுமுக நடிகராக இருந்தார். ஆனால் இப்போது ராஞஜனா ஹிட்டடித்திருப்பதோடு, அடுத்தபடியாக அமிதாப்பச்சனுடன் இணைந்து ஷமிதாப் படத்திலும் நடித்து வரும் தனுஷ், பாலிவுட்டிலும் பேசப்படும் நடிகராக இருக்கிறார்.
அதனால், இதுவரை. தனக்கு எட்டாக்கனியாக இருந்த அலியாட் இந்த முறை கைக்கு எடடி விடுவார் என்கிற நம்பிக்கையுடன் மீண்டும் மீண்டும் அலியாபட்டுடன் பேச்சுவார்த்தையில் இருக்கிறாராம்.