ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
தனுஷின் பட நிறுவனமும், இயக்குனர் வெற்றி மாறனின் பட நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள படம் 'காக்கா முட்டை'. இந்தப் படம் முடிவடைந்த பின்னும் இது பற்றிய செய்திகளை இன்னும் அதிகமாக வெளியிடாமல் இருக்கிறார்கள். படம் எப்போது வெளியாகும் என்பது பற்றிய சரியான தகவல்கள் இல்லை.
கடந்த வருடம் ஆரம்பித்தில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது. படம் ஆரம்பமான போதே எந்தவிதமான தகவலையும் தரவில்லை, படப்பிடிப்பு நடைபெறும் போதும், முடிந்த பின்னும் கூட சொல்லவில்லை. ஆனால், படம் உலகப் பட விழாக்களில் கலந்து கொள்வதைப் பற்றிக் கூட நாமாகத்தான் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
தனுஷுக்கும் வெற்றிமாறனுக்கும் இடையில் பல பிரச்சனைகள் போய்க் கொண்டிருப்பதாகவும், வெற்றி மாறனுக்கு தன்னை வைத்து படம் இயக்க வாய்ப்புக் கொடுத்து பின் தனுஷ் வேண்டாமென்று சொல்லிவிட்டதாகவும் தெரிகிறது. இதுதான் 'காக்கா முட்டை' படம் பற்றி வெளியில் தகவல்கள் வராமல் இருப்பதற்குக் காரணமாகவும் உள்ளது என கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.
சில வாரங்களுக்கு முன் டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட 'காக்கா முட்டை' இந்த மாதம் ரோம் நகரில் நடைபெற உள்ள திரைப்பட விழாவில் கலந்து கொள்ளவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மணிகண்டன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பில் ரமேஷ், ரமேஷ் திலகநாதன், விக்னேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். இனியாவது, படத்தைப் பற்றிய முழுமையான செய்தியைத் தருவார்களா....?