Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'ஐ' ரிலீஸ்...கேரளாவில் மம்முட்டி படம் தள்ளி வைப்பு...?

30 செப், 2014 - 12:10 IST
எழுத்தின் அளவு:

'ஐ' படத்தின் ரிலீஸ் தீபாவளியன்றுதான் இருக்கும் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் கடந்த சில நாட்களாக அந்தப் படம் தள்ளிப் போகவும் வாய்ப்பிருப்பதாகவும் சிலர் பேசி வருகிறார்கள். ஆனால், படத்தின் வேலைகள் பெரும்பாலான விதத்தில் முடிந்த விட்ட நிலையில் தள்ளிப் போகவும் வாய்ப்பில்லை என்கிறார்கள். நவம்பர் மாதம் 'உத்தம வில்லன்' படம், டிசம்பர் மாதம் 'லிங்கா' படம் வெளிவர உள்ள சூழ்நிலையில் 'ஐ' படத்தின் வெளியீடு திட்டமிட்டபடி தீபாவளி தினத்தன்றுதான் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உட்பல பல இந்திய மொழிகளிலும் 'ஐ' படம் டப் செய்து வெளியிடப்பட உள்ளது.


கேரளாவைப் பொறுத்தவரையில் 'ஐ' படம் தமிழிலேயே அதிக இடங்களில் வெளியாகவும் வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. விக்ரம், எமி ஜாக்சன் நாயகன் நாயகியாக நடித்திருந்தாலும் மலையாள முன்னணி நடிகரான சுரேஷ் கோபியும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் அவருக்கிருக்கும் ரசிகர்களாலும் இந்தப் படம் அதிக வரவேற்பைப் பெறலாம் என்கிறார்கள். ஏற்கெனவே, விக்ரமுக்கெனவும் கேரள ரசிகர்களிடையே தனி வரவேற்பு இருக்கிறது. இந்தப் படத்தின் வெளியீடு நேரடி மலையாளப் படங்களின் ரிலீசை பாதிக்கும் என்றும் சிலர் எதிர்பார்க்கிறார்களாம்.


மம்முட்டி நடித்துள்ள 'வர்ஷம்' என்ற படத்தை அன்றைய தினத்தில் வெளியிட முடிவு செய்திருந்தார்களாம். ஆனால், 'ஐ' படத்தை வெளியிட பெரும்பாலான திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதால் 'வர்ஷம்' படத்திற்கு எதிர்பார்த்த திரையரங்குகள் கிடைக்கவில்லையாம். அதனால், அந்தப் படத்தின் ரிலீசை ஒரு வாரம் வரை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in