பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' |
பாலிவுட்டில் திறமை மற்றும் அழகு நிறைந்த நடிகர் ரன்பீர் கபூர். இவரும், நடிகை கத்ரீனா கைப்பும் வெகுநாட்களாக காதலித்து வருகின்றனர். ஆனால் சமீபகாலமாக இவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது போன்ற சூழல் நிலவுகிறது. அதாவது, தற்போது கத்ரீனா, ஹிருத்திக் ரோஷன் உடன் பேங் பேங் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சில காட்சிகளில் கத்ரீனா, ஹிருத்திக் உடன் அதிக நெருக்கம் காட்டி நடித்துள்ளார். இதன்காரணமாக இவர்களுக்குள் முன்பு, சிறு பிரச்னை ஏற்பட்டது. பின்னர் ஹிருத்திக் உடனான நட்பை குறைத்து கொண்டார் கத்ரீனா. தற்போது பேங் பேங் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளிலும் இருவரும் இடைவெளி விட்டே பழகுகின்றனர். இருந்தபோதும் ரன்பீர் கபூர் ஒரு நிலையற்ற தன்மையில் தடுமாற்றத்துடனே காணப்படுகிறார். ஒருவேளை ரன்பீர் கபூரின் அப்பா, ரிஷி கபூர் இவர்களது திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறாரா.? அல்லது கடந்த சில மாதங்களுக்கு முன் ஹிருத்திக்-கத்ரீனா இருவரும் ஜூகு பீச்சில் அதிகாலை 3மணியளவில் உலாவியதை ரன்பீரால் மறக்க முடியவில்லையா என்பது தெரியவில்லை... ரன்பீர் தடுமாற்றத்திலேயே தான் இருக்கிறார்.