ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது எஸ் பிக்சரின் சார்பில் கப்பல் படத்தை வாங்கியுள்ளார். இது அவரது உதவியாளர் கார்த்திக் ரிஷி இயக்கியது. இந்தப் படம் புதுமையான நட்பின் கதை என்கிறார் அவர்.
கார்த்திக் ரிஷி மேலும் கூறியதாவது: இது முழுக்க முழுக்க நட்பின் கதை. வழக்கமாக சினிமாவில் வாடா மச்சான், போடா மச்சான்னு கொஞ்சிக்கிறது. சுவத்துமேல உட்கார்ந்து தம் அடிக்கிறது, டாஸ்மாக்குல தண்ணி போட்டு சலம்புறது, பிரண்டு காதலுக்கு உதவுறது, உயிரை கொடுக்கிறது இப்படி எதுவுமே இல்லாத ஒரு நட்பு.
காதலர்களுக்குள் அடிக்கடி சின்ன சின்ன கோபம் வரும் அடிச்சுவாங்க அப்புறம் கூடிக்கவாங்க. இப்படியான ஒரு பொசசிவ்னஸ் நட்புக்குள்ளும் இருக்கு அதைப் பற்றி பேசுற படம். அதை ரொம்ப ஜாலியா, காமெடியா சொல்ல படம். யதார்த்தத்துக்கு நெருக்கமா இருக்கிற படம். வழக்கமான சினிமாவுக்கான எந்த சாயலும் இல்லாம புதுசா பண்ணியிருக்கிறோம் என்கிறார். கார்த்திக ரிஷி.