மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
1996-ல் சரத்குமார் நடித்த அரவிந்தன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் யுவன் ஷங்கர் ராஜா. அப்படி தனது திரைப்பயணத்தை ஆரம்பித்த யுவன், சில மாதங்களுக்கு முன்பு வெளியான பிரியாணி படத்தோடு 100 படங்களுக்கு இசையமைத்து சதமடித்தார்.
இந்த நிலையில், யுவன் இந்து மதத்தில் இருந்து முஸ்லீம் மதத்துக்கு மாறி விட்டதாக சில மாதங்களாக செய்திகள் கசிந்து கொண்டிருந்தன. பின்னர் அவரும் அதை உறுதிப்படுத்தினார் அதையடுத்து, தனது பெயரையும் அவர் மாற்றி விட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது சூர்யா நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கும் மாஸ் படத்தில் இருந்து தனது பெயரையும் யுவன் மாற்றிக்கொள்ளப்போவதாக சமீபத்தில் பரபரப்பு செய்திகள் வெளியாகின.
ஆனால், அதுபற்றி யுவன் எந்த செய்தியும் வெளியிடாதபோதும், அவரது சித்தப்பா கங்கைஅமரனின் மகனான இயக்குனர் வெங்கட்பிரபு, மாஸ் படத்தின் டைட்டில் கார்டடில் யுவன் ஷங்கர் ராஜாவின் பெயரை மாற்றப்போவதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என்று தனது டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார். ஆக, சினிமாவில் தொடர்ந்து இதே பெயரில்தான் யுவன் செயல்படுவார் என்று தெரிகிறது.